எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சோதிடம் என்பது நம்பிக்கை மட்டுமே. அறிவியல் ரீதியிலான அடிப்படை ஆதாரங்கள் கிடையாது. சோதிடத்தில் கூறப்படுபவை குறித்து அறிவியல் ஆய்வுகள் மூலமாக அதன் நம்பகத்தன்மைகுறித்து ஆய்வுகளில், அனைத்து நிலைகளிலும், அதன் முடிவுகள் ஒரே மாதிரியாக இல்லாமல், மாறியே இருந்து வந்துள்ளன.

பெங்களூரு, அக். 29 இந்திய அறிவியல் நிறுவனத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சோதிட நிகழ்வுக்கு எதிரான போராட்டத்தால் நிறுத்தப்பட்டது.

கருநாடக மாநிலத்தில் பெங்களூருவில் இயங்கி வருகின்ற இந்திய அறிவியல் பயிற்சி நிறுவன வளாகத்தில் 'தனிமனித வளர்ச்சிக்கான அறிவியல் கருவி சோதிடம்' எனும் தலைப்பில் நவம்பர் 25 மற்றும் நவம்பர் 26 ஆகிய இரண்டு நாள்கள் சோதிட பயிற்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய சோதிட அறிவியல் கவுன்சில் உறுப்பினர்   ராமசேஷய்யா சோதிடம்குறித்த பயிற்சியை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

சோதிடப் பயிற்சிக்கான பயிற்சிக்கட்டணமாக பொதுமக்களுக்கு ரூ.2000, இந்திய அறிவியல் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த மேனாள் மாணவர்கள், அவர்களின் வாழ்விணையர்கள் பயிற்சி பெற கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

தொடக்கத்திலேயே முறியடிப்பு

மேனாள் மாணவர்கள் சங்கத்தின் பெயரில் ஒரு தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்நிகழ்வுக்கு மேனாள் மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் கடும் கண்டனம் தெரி வித்தார்கள். அறிவியல் நிறுவனத்தில் அறிவியலுக்கு புறம்பான சோதிட நிகழ்வு நடத்தப்படாமல் தொடக்கத் திலேயே முறியடிக்கப்பட்டது.

சோதிட பயிற்சி நிகழ்வு நிறுத்தப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, “அந்த பயிற்சியின்மூலமாக ஒத்த கருத்து உள்ளவர்களிடையே விவாதங்கள் மேற்கொண்டு, இதுபோன்ற நம்பிக்கை முறைகளை எதிர்த்து பரப்புரை செய்ய அடித்தளம் அமைக்க வேண்டும் என்று கருதினோம்’’ என்றனர்.

சோதிடம் என்பது நம்ப முடியாதது!

சோதிட பயிற்சியை கடுமையாக எதிர்த்த ஆராய்ச்சி யாளர்கள் சோதிடப்பயிற்சிகுறித்து கூறும்போது, “சோதிடப்பயிற்சி அளிப்பது கடும் அதிர்ச்சிக்குரியது. மற்றும் சோதிடம் என்பது வெளிப்படையாகவே நம்ப முடியாததும் ஆகும்’’ என்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்திய அறிவியல் பயிற்சி நிறுவன இயக்குநர் அனுராக் குமாருக்கு சோதிட பயிற்சியை   எதிர்த்து எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டதாவது:

சோதிடம் என்பது நம்பிக்கை மட்டுமே. அறிவியல் ரீதியிலான அடிப்படை ஆதாரங்கள் கிடையாது. சோதிடத்தில் கூறப்படுபவை குறித்து அறிவியல் ஆய்வுகள் மூலமாக அதன் நம்பகத்தன்மைகுறித்து ஆய்வுகளில், அனைத்து நிலைகளிலும், அதன் முடிவுகள் ஒரே மாதிரி யாக இல்லாமல், மாறியே இருந்து வந்துள்ளன.

இந்திய அறிவியல் பயிற்சி நிறுவனத்தின் மேனாள் மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் கே.எஸ்.முகுந்தா  நேற்று காலை கூறும்போது,

“செயற்குழுக்கூட்டத்தில்சோதிடப்பயிற்சிநடத்துவ தாக முடிவு செய்யப்பட்டது. இதில் உள்ள முரண் பாடுகள்குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தால், அவர் அதற்கு பதில் கூறுவார்’’ என்றார்.

இந்தியா முழுவதும் போலி அறிவியலை எதிர்த்து போராட்டங்கள் நடத்திய  பி.எஸ்.எஸ். எனும்  திருப்பு முனை அறிவியல்  சங்கம்  நேற்று பிற்பகலிலேயே  சோதிட பயிற்சியை எதிர்த்து போராடும் அறிவியலாளர்களுடன் தன்னை இணைத்துக்கொண்டது.

இந்திய அறிவியல் பயிற்சி நிறுவனத்தின் மேனாள் மாணவர்கள் சங்கத்தின் ஒரு தரப்பினர் அறிவியல் மனப் பான்மையை காத்திடும் நடவடிக்கையை மேற்கொண்டது.  இந்திய அறிவியல் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் அனுராக் குமாருக்கு சோதிடப்பயிற்சிக்கு எதிராக கடிதம் அனுப்பியது-. சோதிடப் பயிற்சிக்கு எதிரான கையெழுத்து இயக்கத்துக்கு பி.எஸ்.எஸ். முழு ஆதரவை அளித்து அறிக்கை வெளியிட்டது.

அதன்பிறகு, சோதிட பயிற்சி ஒத்திவைக்கப்பட்டதாக பி.எஸ்.எஸ். அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலையில் மேனாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் சோதிட பயிற்சி நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேனாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.பி.ரவீந்திரா கூறியதாவது:

“எங்களின் கருத்து வேறு. அதை தெளிவுப்படுத்து வதற்கான சூழல் வரவில்லை.  அதேநேரத்தில் இந் நிகழ்வை எதிர்ப்பவர்களின் கவலைகளை புரிந்து கொள்ள முடிகிறது. இரண்டு தரப்பிலானவர்கள் இருக்கிறார்கள். ஒரு தரப்பு சோதிடத்தை முழுவதுமாக நம்புகிறவர்கள். அடுத்தவர்கள் அதுகுறித்து விவாதித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பவர்கள். ஒத்த கருத்து உள்ளவர்களிடையே விவாதங்கள் மேற்கொண்டு, இதுபோன்ற நம்பிக்கை முறைகளை எதிர்த்து பரப்புரை செய்ய அடித்தளம்

அமைக்க வேண்டும்’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner