எழுத்துரு அளவு Larger Font Smaller Font


காந்திநகர், அக். 29 குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவ மனையில் நேற்று ஒரே நாளில் 9 பச்சிளங்குழந்தைகள் உயிரி ழந்தன.

பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அய்ந்து குழந்தைகள் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு, மரணமடைந்தன எனவும், அம்மருத்துவமனையில் பிறந்த நான்கு குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்தன எனவும் அம்மருத்து வமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரே நாளில் 9 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 73 குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றம், மாற்றம் என்று கூறி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியின் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருக் கும் மாநிலங்களில் நடைபெறும் அவலங்களைப் பாரீர்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner