எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தானே,அக்.30 குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு இழப்பே ஏற்படும். பாஜகவுக்கு 150 இடங்கள் கிடைத்தால் அது அதிசயமே, அதுவும்  வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறால் ஏற்பட்டதாகவே கருதப்பட வேண்டும் என்று மகாராட்டிரா நவ நிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.

தானே பகுதியில் ராஜ் தாக்கரே பேசு கையில் குறிப்பிட்டதாவது:

“குஜராத் மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் பேரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவே அண் மைக்கால நிகழ்வுகள்குறித்த அறிக்கைகள்  காட்டுகின்றன. மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டங்களின் காட்சிப்பதிவுகளில் மோடி பேசுகின்ற போதே பார்வையாளர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறுகின்றனர். கடந்த காலங்களில் எப்போதுமே இது போன்று நடந்ததில்லை.  இதிலிருந்துகூட நிலைமையை எவரும் இலகுவாக உணர்ந்து கொள்ளமுடியும்’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner