எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, அக்.31 காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர்களின் கூட் டத்தை நேற்று (30.102017) டில்லி யில் காங்கிரசு தலைமையகத்தில் நடத்தினார். இதில் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து கருப்பு தினமாக அனுசரிக்கும் வருகிற 8- ஆம் தேதியன்று மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்து அவர்களிடம் விளக்கினார்.

இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:-

பணமதிப்பு நீக்கம் ஒரு பேரழிவு. நவம்பர் 8- ஆம் தேதி, இந்தியாவுக்கு சோக தினம் ஆகும். பணமதிப்பு நீக்கம் மற் றும் ஜி.எஸ்.டி.யால் இந்திய பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய சேதத்தை பிரதமர் ஏற்படுத்தி விட்டார். ஜி.எஸ்.டி., ஒரு சிறந்த யோசனை ஆகும். ஆனால் அதை அரசு தவறாக அமல்படுத்தியதால் நாட்டு மக்களுக்கு ஏராளமான துயரங்கள் ஏற்பட்டன.

பணமதிப்புநீக்கத்தின்முத லாமாண்டு தினத்தை கருப்பு பண ஒழிப்பு தினமாகமத்திய அரசு கொண்டாடுவது ஆச்சரி யத்தை ஏற்படுத்துகிறது. இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக் கிறது? இதனால் மக்களுக்கு ஏற் பட்ட பாதிப்புகளை குறித்து அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாறாக இதை கொண்டாடு வதுஎன்பது,பணமதிப்புநீக்கம் மற்றும் தவறாக அமல்படுத்தப் பட்ட ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை என்ப தையே காட்டுகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தி நடத்திய கூட்டங்களுக்குப்பின் கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங், கட்சித்தலைவர் மன்பிரீத் பாதல் ஆகியோர் கூட்டாக செய் தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதா வது:-

இந்தியாவின் மிகப்பெரிய ஊழல், பணமதிப்பு நீக்கம் ஆகும்.தற்போதுகூடஅதன் விளைவுகளில்சிக்கிநாட் டின் பொருளாதாரம் தத்தளித்துக் கொண்டுஇருக்கிறது.மிகப்பெரிய இந்த பேரழிவின் முதல் ஆண்டு தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கும் வேளையில், அன் றைய தினம் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

அதன்படிஅனைத்துமாநி லம் மற்றும் மாவட்ட தலைநக ரங்களில் ‘‘இந்தியா தொடர்ந்து பாதிக்கப்படுகிறது’’ என்ற தலைப்பில் போராட்டங்கள் நடத்தப்படும். மேலும் பண மதிப்பு நீக்கத்தை பிரதமர் அறிவித்த இரவு 8 மணியை நினைவுகூரும் நோக்கில், அன்று இரவு 8 மணிக்கு ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டங்களின் தலைநகரங்களில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தப்படும்.

பொதுமக்களைஅவதிக் குள்ளாக்கும் இந்த பிரச்சினை களுக்கு பாரதீய ஜனதா அரசு தீர்வு காணும் வரை காங்கிரசு கட்சி ஓயாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner