தொண்டறச் செம்மல்கள் அ. சுபாஸ் சந்திரபோஸ் - காஞ்சனா போஸ் அவர்களின் இல்லம் சென்று, போஸ் இணையருக்கு மாலை அணிவித்து கழகப் புத்தகங்களையும் வழங்கினார் தமிழர் தலைவர். உடன் மோகனா வீரமணி, மாவட்ட தலைவர் இல. திருப்பதி, வானவில் மணி, வே.செல்வம், ப.சுப்பிரமணி ஆகியோர் உள்ளனர்.
வானவில் மணி இல்ல மணவிழாவில் உரையாற்றிய அ.சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள், சிவகாசியில் பெரியார் மய்யத்தினை அமைப்பதற்காக தமது சார்பில் ஏற்கெனவே இடத்தை வழங்கியதை சுட்டிக்காட்டி, அந்த இடத்தில் விரைவில் கட்டடம் அமைக்க வேண்டும் என தமிழர் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்து, அந்தப் பணிக்காக தமது சார்பில் ரூ.10 லட்சம் வழங்குகிறேன். மேலும் அப்பணிக்காக வசூலித்தும் கொடுப்பேன் எனக் கூறி, கட்டடப் பணியை தலைவர் ஆசிரியர் அவர்கள் விரைவுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். (சிவகாசி, 30.10.2017).