எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பஸ்ம ஆர்த்தி எனப் படும் சாம்பல் அபிஷேகம் ஆகமவிதிப்படி அதிகாலை 4 மணிக்கு நடைபெறும். இந்த பஸ்ம ஆர்த்திக்கு இடுகாட்டில் இருந்து சூடான சாம்பல் கொண்டுவந்து மட் டுமே செய்யவேண்டும் என்பது ஆகமவிதியாகும் ஆனால் இப்போது கோவில் விதிகள் மாறி விபூதி பூசப் படுகிறது.

சிவலிங்கத்தின் மேற்புறத் தில் இருக்கும் 100 கிலோ எடை உள்ள ருத்ரயந்திரம் பொறிக்கப்பட்ட வெள்ளிச் சொம்பு போன்ற அமைப்பின் கீழே சிறிய துளையிட்டு அதில் சொட்டு சொட்டாக நீர் சிவலிங்கத்தின் மேல் விழுவது போன்ற அமைப்பு உள்ளது, இதற்கு ஜலதாரி என்று பெயர்.

துஷாணனை வதம் செய்த பிறகு உஜ்ஜனி சிவ னின் கோபத்தை தணிக்க அவர்மீதுஎப்போதும்ஜல தாரியில் இருந்து நீர் விழுந்துகொண்டு இருக்க வேண்டும் என்பதும் ஒரு ஆகமவிதியாகும், இதற்கு கோடி தீர்த்தம் என்று பெயர், உச்சநீதிமன்றம் கோடி தீர்த்தத்திற்கு தடை விதித்துள்ளது.

சிப்ரா ஆற்றிலிருந்து எடுத்துவரும் தண்ணீரில் தான் தினமும் சிவலிங்கத் திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதும் ஒரு ஆகமவிதிதான், ஆனால் மகாகாளேஷ்வர் பகுதியில் ஓடும் சிப்ரா நதி மாசடைந்த நதிகளின்பட்டியலில்2003 ஆம் ஆண்டு இணைந்து விட்டது, சிப்ரா நதிக்கரையில் உள்ளஅரிகர்,சிர்பூர்,மற்றும் மண்ட்லா போன்ற நகரங் களில் தொழிற்பேட்டைகள் உள்ளன. இந்த தொழிற் பேட்டைகளில் இருந்து வெளியேறும்  கழிவுநீர் அனைத்தும் சிப்ரா நதியில் தான் கலக்கிறது, இதன் காரணமாக சிப்ரா ஆறு மாசடைந்துவிட்டது, இந்த மாசடைந்த நீர் சிவலிங் கத்திற்குஅபிஷேகம்செய் யப்படுவதால் அதன் மேற் புறம் சிதைய ஆரம்பிக்கிறது, இதனால் சிப்ரா ஆற்று நீரை அபிஷேகத்திற்கு பயன் படுத்துவதை நிறுத்திவிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரால் மட்டுமேஅபிஷேகம்செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

(‘இந்துஸ்தான் டைம்ஸ்’, 27.10.2017)

இதன்மூலம்பூஜைமுறை யில் மாற்றம் கொண்டுவர லாம் - அதற்குத் தடை யில்லை என்பது திட்டவட்ட மாகி விடவில்லையா?

என்னதான் கோவில் மூர்த்திக்குக் கட்டுக் கட்டாக கீர்த்திப் பாசுரங்கள் பாடி வைத்தாலும், அது வெறும் கல் - அல்லது உலோகம் - சில பொருள்கள் அதன்மீது தொடர்ந்து விழுந்தால் கல் லும் கரையுமே!

கடவுள் சக்தி- இன்னும் எத்தனை நாளுக்குக் கதை யளப்பு?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner