எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆகா, இது அல்லவோ பக்தி!

அம்மன் தாலியை அடகு வைத்த அர்ச்சகர்

திருப்பதி, நவ.1 ஆந்திராவில், கனக துர்க்கையம்மன் கோவி லில், அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தாலியை, அர்ச்சகர் ஒருவர், திருடிச் சென்று அடகு வைத்த சம்பவம், தற் போது வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம், விஜய வாடாவில் உள்ள கனகதுர்க்கை யம்மன் கோவிலுக்குள், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் சன்னதி உள்ளது.

இங்கு வள்ளி அம்மனின் கழுத்தில் அணிவிக்கப்பட்டி ருந்த ஒரு சவரன் தங்கத் தாலி, சில மாதங்களுக்குமுன் காணா மல் போய்விட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து, அதி காரிகள் விசாரித்தனர்.

இந்நிலையில், அந்த கோவி லில் பணிபுரியும் அர்ச்சகர் ஒருவர், அம்மனின் தாலியை திருடிச் சென்று, அடகு வைத்தது விசாரணைமூலம் தெரிய வந்தது.

அதிகாரிகள் அதை மறைத்து வைத்தனர்

இதை அறிந்த அதிகாரிகள், யாருக்கும் தெரியாமல் தாலியை அடகிலிருந்து மீட்டுள்ளனர். தாலி அடகு வைக்கப்பட்ட தகவல் மற்றவர்களுக்குத் தெரிந் தால், பிரச்சினை உருவாகும் எனக் கருதி, அதிகாரிகள் அதை மறைத்து வைத்தனர்.

கோவிலில் பணிபுரியும் சில ஊழியர்கள்மூலம், இந்த உண்மை தற்போது வெளிச் சத்துக்கு வந்து உள்ளது.

இதுகுறித்து, கோவில் செயல் அதிகாரி சூரியகுமாரியிடம் கேட்டபோது, ‘‘கோவி லில், இதுபோன்ற ஓர் அதிர்ச் சிகரமான சம்பவம் நிகழ்ந்ததாக புகார் இன்னும் வரவில்லை. உடனடியாக விசாரித்து, அதன் மீது நடவடிக்கை மேற்கொள் ளப்படும்‘’ என்றார்.உலக வறுமை ஒழிப்பு நாள்

1956 - இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைப்பு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner