எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லக்னோ, நவ.1 பாஜகவினர் கூறி வரும் பொய்களை உத் தரப்பிரதேச மாநில மக்கள் நம்ப வேண்டாம் என்று சமாஜ் வாதி கட்சித் தலைவரும், அந்த மாநில முன்னாள் முதல் வருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் நவம்பர் 22- ஆம் தேதி முதல் மூன்று கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சர்தார்வல்லபபாய்படே லின் பிறந்த தினத்தை முன் னிட்டு உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள சமாஜவாதிக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட் சித் தொண்டர்கள் மத்தியில் அகிலேஷ் பேசியதாவது:

விவசாயக் கடன் தள்ளு படி,ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி என நடவடிக்கைகளில் உண்மைக்கு மாறான தகவல் களை நாட்டு மக்கள் மத்தியில் பாஜக பரப்பி வருகிறது. மத் தியில் உள்ள மோடி அரசா னாலும்சரி,மாநிலத்தில்உள்ள யோகிஆதித்யநாத்அரசானா லும் சரி, அவர்கள்மக்கள்நல னுக்காகஎந்தமுக்கியநடவடிக் கையும் எடுக்கவில்லை. பாஜகவினர் தொடர்ந்து பொய் களைப் பேசி, மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று வருகின்றனர். அவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை இனி மேலும் மாநில மக்கள் நம்பக் கூடாது.

எச்சரிக்கையாக...

மக்களிடையே பிளவை ஏற் படுத்தி அதன்மூலம் தங்கள் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைக்க நினைப்பவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner