எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, நவ.3 இந்தியா முழு வதும் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நிலைகளில் பெண்களின் நிலைகுறித்து புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.

தொண்டு நிறுவனமாகிய பிளான் இந்தியா, இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் நிலைகள்குறித்து புள்ளி விவரக்கணக்கெடுப்பை நடத்தி, அப் புள்ளி விவரத் தகவல் தொகுப்பினை மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கான அமைச் சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பெண்கள் சுகாதாரத்தில்  இரண்டாமிடத் தில் உள்ளனர். கல்விநிலைகளில் 22ஆவது இடத்தில் தள்ளப்பட்டுள்ளனர். பெண்கள் பாதுகாப்பு நிலைகளில் 12 ஆவது இடத்திலும், வறியநிலையில் மூன்றாமிடத்திலும், பாலியல் வன் முறைகளில் 10ஆவது இடத்திலும் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளதாக புள்ளிவிவரத் தகவலில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பெண்கள் சுகாதாரம்

பெண்கள் சுகாதாரத்தில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. பாலியல் வன்முறைகளின்றி பெண்கள் பாதுகாப்பாக இருப்பதில் கோவா மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. கல்வி பெற்ற பெண்களில் முதலிடத்தில் இமாச்சலப்பிரதேச மாநிலம் உள்ளது.  பெண்கள் வறுமை ஒழிப்பு வரிசையில் வடகிழக்கு மாநிலமாகிய மணிப்பூர் முதலிடம் வகிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பில் கோவா, கேரளா, மிசோரம், சிக்கிம் மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் தரவரிசைகளில் முந்தியுள்ளன. அந்த வகையில் பெண் களின் பாதுகாப்பில் தமிழ்நாடு 10ஆவது இடத்தில் உள்ளது. பெண்கள்மீதான வன்முறைகளை எதிர்கொள்ளும் வகை யில், பெண்கள் கல்வி, சுகாதாரம், வறு மையற்ற பெண் குழந்தைகள், வன் முறையிலிருந்து பாதுகாப்பு உள்ளிட் டவற்றை அடிப்படையாகக் கொண்டு புள்ளிவிவரக் கணக்கெடுப்பு நடத்தப் பட்டது.

பெண் கல்வியில்

தமிழகம் பின் தங்கியுள்ளது

தமிழ்நாடு மாநிலத்தில் பெண்கள் சுகாதாரம், பெண் குழந்தைகள் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் தரவரிசையில் முந்தியிருக்கிறது. அதேநேரத்தில், பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் கல்வி நிலைகளில் பின்தங்கியுள்ளதாக புள்ளி விவரத்தகவல் குறிப்பிடுகிறது. தமிழ் நாட்டில் சுமார் 15.7 விழுக்காட்டளவில் 18 வயது நிறைவடைவதற்கு முன்ன தாகவே பெண்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. 60 விழுக்காட்டளவில் பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் 10 ஆவது இடத்தில்  தமிழகம் இருப் பினும், குழந்தைகள் பிறந்த ஒரு மணி நேரத்தில் பாலூட்டும் தாய்மார்களாக 55.9 விழுக்காட்டினர் மட்டுமே உள் ளனர் என்று ஆய்வுத்தகவல் கூறுகிறது.

தமிழ்நாடு பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பெண் பாதுகாப்பு குறைவால் 12ஆவது இடமும், பெண் கல்வியில் 22 ஆவது இடத்திலும் உள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்கு களில் குடும்ப வன்முறை வழக்குகளால் 99.6 விழுக்காட்டளவில் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண்குழந்தைகளை பாதுகாத்திட, மாநில அரசு இரண்டு கோடி நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது என்று தமிழ்நாடு சமூக நலத்துறை அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner