எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அகமதாபாத், நவ.3 தேர்தல் ஆணையம் தனது முதல் கட்ட ஆய்வில் 3550 பழுதான வாக் குப் பதிவு ஒப்புகை இயந்திரங் களைக் கண்டுபிடித்துள்ளது.

குஜராத் தேர்தல் இரு கட் டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14ஆகிய தேதிகளில் நடை பெறும் என தேர்தல் ஆணை யம் அறிவித்திருந்தது.  இந்த தேர்தலில் 70,182 மின்னணு வாக்குப்பதிவுக் கருவிகள் (ஒப் புகைச்சீட்டுடன் இருக்கும் புதிய கருவிகள்) வழங்கப்பட் டுள்ளன.  இதில் 46,000 இயந் திரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் அய்தராபாத் தில் உள்ள எலெக்ட் ரானிக்ஸ் கார்பொரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களில் இருந்து வாங்கப் பட்டுள்ளன.

மீதமுள்ளவை பஞ்சாப், உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஜார்க்கண்ட், அரி யானா, கோவா மற்றும் கருநா டகா போன்ற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவை.

இப்படி கொண்டுவரப்பட்ட வாக்குப் பதிவுக் கருவிகளை, தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

முதல்கட்ட ஆய்வில் இந்த இயந்திரங் களில் 3550 கருவிகள் பழுதானவை என  கண்டறியப் பட்டுள்ளது.  இவைகளில்  உள்ள சென்சார்கள் வேலை செய்யாமை, இணைப்புக் குளறு படிகள், உடைந்த பிளாஸ்டிக் பாகங்கள் ஆகிய பழுதுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகளை மாற்றச் சொல்லி தயாரிப்புத் தொழிற் சாலை களுக்கு அனுப்பட உள்ளன.

குறிப்பாக ஜாம்நகர் மாவட் டத்தில் இருந்து அனுப்பப்பட்ட இயந்திரங்களில் சுமார் 26 விழுக்காட்டிற்கும் மேல் பழு தான இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.  மற்றும் சில இடங்களில் 20 விழுக் காடு பழுதான இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.  இதனி டையே கடைசி நேரத்தில் மின்னணுக்கருவிகள் பழுது ஏற்பட்டுவிட்டால் உடனடி யாக மாற்ற 4150 கருவிகள் புதிதாக வாங்குவதற்குத் தேர் தல் ஆணையம் திட்டமிட் டுள்ளது.

ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகள், உத்தரப்பிரதேசத்தில் நடந்ததுபோல் குஜராத்திலும் மின்னணுவாக்குப் பதிவுக் கரு விகளில் மோசடி செய்து பாஜக வெற்றி பெற திட்டமிட்டுள்ளது என்று கூறியிருந்தன. இந்த நிலையில் வாக்குப்பதிவிற்காக கொண்டு வரப்பட்டுள்ள பெரும் எண்ணிக்கையிலான கருவிகள் பழுதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner