எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, நவ.3 உலக ளவில், ஊட்டச் சத்து குறை பாடுள்ள குழந்தைகளின் எண் ணிக்கையில், இந்தியா முத லிடத்தில் உள்ளதாக, தனியார் அமைப்புகள் நடத்திய ஆய் வில் தெரிய வந்து உள்ளது.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான, 'அசோசெம்' மற்றும் லண் டனைச் சேர்ந்த, தனியார் அமைப்பு இணைந்து, உலகம் முழுவதும், ஊட்டச்சத்து குறை பாடுள்ள குழந்தைகள் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டன. அதன் விவரம்: கடந்த, 2005-15 வரை, பச்சிளம் குழந்தைகள்மற்றும், 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில், இறப்பு எண்ணிக்கை குறைந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு அதி கரித்து உள்ளது.

உலகளவில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை கள் எண்ணிக்கையில், 50 சதவீதம் இந்தியாவில் உள்ளது. 2015இல், இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது. நக ரங்களில் வசிக்கும் குழந்தை களை விட, கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் தான், ஊட்டச்சத்து விஷயத்தில் பின்தங்கி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியவர்களை பொறுத்த வரை, நீரிழிவு எனும் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில், உலகின் தலைநகர் எனக் கூறும் வகையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.'நாடு முழுவதும், 6.92 கோடி பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டு உள்ளனர்' என, கூறப் பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner