எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, நவ.3 மத்திய அரசின் மானியத்தில் வழங்கப்படும் 14.2 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலை, 491.15 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சமையல் எரிவாயு உருளையின் விலை, 4.50 ரூபாய் உயர்ந்து, 495.65 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

மேலும், மானியம் இல்லாமல் வழங்கப்படும் எரிவாயு உருளையின் விலை, 93-ரூபாய் அதிகரித்து 742 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. ஏற்கெனவே, ரேஷன் கடையில் விற்கப்படும் சர்க்கரையின் விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து, எரிவாயு உருளை விலை உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2007    - $74.44, 2008 - $102.00, 2009 - $59.93, 2010 - $72.15, 2010 - $79.93, 2011 - $94.73, 2012 - $92.20, 2013 - $95.79, 2014 - $88.47,  2015 - $43.22, 2016 - $37.02, 2017 (Nov1) - $42.63.

இதுதான் கடந்த 10 ஆண்டுகளாக உள்ள கச்சா எண்ணெய் விலை, அப்படி இருக்க சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் சமையல் எரிவாயு (மானியத்துடன் கூடிய) உருளையின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறுகிறது,   மானியமில்லாததும் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் வரும் மார்ச் 2018-ஆம் ஆண்டு முதல் மானியம் ரத்து செய்யப்படுகிறதாம்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner