எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களுரு, நவ.4 எந்த வொரு அரசியல் கட்சியின் முகமாகவும் இல்லாமல் ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றார் கருநாடக முதல்வர் சித்த ராமையா.

பெங்களூரு கிருஷ்ணா அரசு இல்லத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச் சியில் 'வார்த்தா பாரதி' கன்னட நாளிதழின் 15 -ஆவது ஆண்டு இதழை வெளியிட்டு அவர் பேசியது:

அரசு, அரசியல் கட்சி அல்லது மக்கள் பிரதிநிதிகள் யாராக இருந்தாலும் தவறி ழைத்தால் அதை தவறு என்று கூறும் துணிவு நாளிதழ்களுக்கு இருக்க வேண்டும். ஊழலில் ஈடுபட்டிருந்தாலும் அதை தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். சமூகவிரோத சக்தி களுக்கு எதிராக போர்புரியும் ஆற்றலையும் நாளிதழ்கள் பெற வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சியின் முகமாக வும் ஊடகங்கள் மாறக் கூடாது. தவறு செய்திருந்தால் கடுமையாக விமர்சியுங்கள். ஆனால், அவசியமில்லாமல் யாரையும் விமர்சிக்கக் கூடாது.

மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது, சமுதாயத்தில் காணப் படும் ஏற்றத்தாழ்வுகளை சீர் படுத்துவது, சமூக ஒழுக்கங் களைத் தூக்கிப்பிடிப்பது, மதச்சார்பின்மை தத்துவங்களை நடைமுறைப்படுத்துவது, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிப்பது, அரசியல மைப்புச் சட்டத்தின் எண் ணங்களுக்கு வடிவம் கொடுப் பது போன்ற மகத்துவம் நிறைந்த கடமைகள் ஊட கங்கள் மீதிருப்பதை மறந்து விடக் கூடாது. புதிய கரு நாடகத்தின் மாற்றத்துக்கான பயணத்தை பாஜகவினர் தொடங்கியுள்ளனர். மதவாத கொள்கையில் இருந்து மதச் சார்பின்மை கொள்கைக்கு பாஜகவினர் மாற வேண்டும். பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா போன்றோரிடம் இருந்து கன்னடமொழிப் பற்றை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கன்னட மொழியில் முதல்முறையாக அரசு கடிதங்களை எழுதிய திப்பு சுல்தான், எப்படி கன்னட விரோதியாக இருக்க முடியும்? தனது ஆட்சியில் தலைமை அமைச்சராக பூர்னய் யாவை நியமித்துக் கொண் டவர், எப்படி இந்துமதத்துக்கு எதிராக செயல்படுவார்? பொய் யான பிரசாரங்களில் ஈடுபடும் சமூக விரோத கும்பல்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner