பாட்னா, நவ.4 இந்தியா வின் வடமாநிலங்களில் இன்று கார்த்திகை பூர்ணிமா (பவுர் ணமி) தினம் கொண்டாடப் படுகிறது.
இது இந்து , சீக்கிய மற்றும் ஜெயின் மதத்தினரால் கொண் டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி பீகார் மாநி லத்தின் பெகுசாராய் மாவட் டத்தில் உள்ள சிமாரியா என் னும் ‘புனித’ தலத்தில் கங்கை நதியில் ‘புனித’ நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று கூடினர். அவர்கள் 'புனித' நீராடுவதற்காக கங்கை நதியில் இறங்கியபோது அதிக கூட்டத்தின் காரணமாக நெரி சல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர்.