எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், நவ. 4 விபத்தில் சிக்குபவர்கள் மற்றும் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு 2 நாள் இலவச சிகிச்சை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று கேரள முதல் வர் பினராயி விஜயன் உத்தர விட்டுள்ளார்.

திருநெல்வேலியைச் சோந்த முருகன் என்ற கூலித் தொழி லாளி கடந்த ஆகஸ்ட் மாதம் திருவனந்தபுரத்தில் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந் தார். அவருக்கு யாரும் உதவ வராததாலும், அவரிடம் பணம் இல்லாததாலும் 5 மருத்துவ மனைகளில் அவரை சேர்க்க முயற்சி செய்தும் மருத்துவ மனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. இத னால் இரத்தம் அதிக அளவு வெளியேறி மரணமடைந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார். ஆனால் 5 மணி நேரம் வரை பல மருத்துவ மனைகளுக்கு கொண்டு சென் றனர். இதே போல் கடந்த மாத மும் சிகிச்சை அளிக்க மறுத்த காரணத்தால் ஒருவர் உயிரி ழந்தார்.

தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முன்வராததற் குக் காரணம் மருத்துவமனையில் சிகிச்சைக்கான முன்பணம் தர வும், சிகிச்சைக்கு கட்டணத்தை தர இயலாமையும் காரணமாக மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தொடர்ந்து மறுத்து வருகின்றன.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர்களுடன் கலந்தாலோசித்து புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் விபத்தில் சிக்குபவர்களை அருகில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதித் தால் அவாகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அவர் ஏழையா? பணக்காரரா? என்று பார்க்காமல் 48 மணி நேரத்திற்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த சிகிச்சைக்குரிய பணத்தை அரசே செலுத்தும். சிகிச்சை பெறுபவர்கள் வசதிக் குறைவாக இருக்கும் பட்சத்தில் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து வசூல் செய்து வழங் கப்படும் என்று கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner