எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க. தலைவர்களின் மற்றொரு மோசடி:

தனியார் நிதிப் பரிமாற்று நிறுவனத்தில் மத்திய அமைச்சர்கள் இயக்குநர்களா? : காங்கிரஸ் கண்டனம்

புதுடில்லி, நவ.5 பாஜக தலை வர்களின் மற்றொரு மோசடியாக தனியார் நிதிப் பரிமாற்று நிறுவனத்தில் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இயக்குநர்களாக உள் ளனர். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் கருப்புப்பணம், வெள்ளையாக மாறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந் துள்ளது. இது தண்டனைக்குரிய குற்றம் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

'திவயர்' என்ற இணையதளத்தில் அக்டோபர் முதல் வாரம் அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் நிறுவனம் ஒரே ஆண்டில் பலகோடி ரூபாய்களை முறைகேடாகப் பெற்றது தொடர்பான புகார் எழுந்துள்ள நிலையில் தற்போது மற்றொரு நிதி முறைகேடும் வெளியாகியுள்ளது.

பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோபால். இவரது மகன் சவுரியா தோபால். இவர் நிதி நிறுவனம் மற்றும் பாஜக தலைவர்கள் மோடி உள்ளிட்ட பலர் அயல்நாடுகள் செல்லும் போது அங்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்யும் தனியார் நிறுவனம் ஒன் றையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்கள் அனைத்தும் "இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட்டளை" என்ற பெயரின் கீழ் இயங்குகின்றன. இந்த நிறுவனத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இயக்குநராக உள்ளார்.

இது குறித்து 'தி வயர்' இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப் பதாவது, ''இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட்டளை அயல்நாடுகளில் இருந்து பெருவாரியாக நிதியைப் பெறுகிறது.  தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இந்த நிறுவனங்கள் கொடுக்கும் பெரிய தொகைகளுக்கு வரிச்சலுகையும் உண்டு. உள்நாட்டிலும் பல தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் அதிபர்கள் இந்த நிறுவனத்திற்கு நிதி வழங்கியுள்ளனர். பொதுவாக இவ் வாறு நிதி பெறும் அறக்கட்டளைகளில், இதர நிறுவனங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் பதவிகளில் இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பு வகிக்கக் கூடாது.

அப்படி அவர்கள் பொறுப்பு வகிக்கும் போது இவர்களின் பெயரைப் பயன்படுத்தி நிதிமுறைகேடுகள் செய்ய வாய்ப்புண்டு. போலியாக அமைச்சர் களின் பெயரைக்கூறியே கோடிக்கணக் கான ரூபாய் முறைகேடுகள் செய்த நிதி நிறுவனங்கள் இருக்கும் போது அமைச்சரே நேரடியாக இயக்குநராக இருக்கும் நிறுவனத்தில் முறைகேடுகள் நடக்க 100விழுக்காடு வாய்ப்புகள் உள்ளன.

அஜித் தோபாலின் மகன் சவுரியா தோபால் நடத்தும் இந்த நிறுவனத்தில் நிர்மலா சீத்தாராமன் மட்டுமல்லாமல்  வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா மற்றும் வெளி யுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ஆகியோரும் இந்நிறுவ னத்தின் இயக்குநர்கள். பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ராம் மாதவ்வும் இயக்குநராக உள்ளார்'' எனக் கூறப்பட்டுள்ளது.

சவுரியா தோபால் நிறுவனத்துடன் மத்திய அமைச்சர்கள் கொண்டுள்ள வியாபாரத் தொடர்புகள் குறித்து, 'தி வயர்' விளக்கம் கேட்டதாகவும், தனியார் நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ள சான்றுகளைக் காட்டி இந்த அமைச்சர்களிடம் விளக்கம் கேட்ட போது இந்த அமைச்சர்கள் பதில் எதுவும் கூறாமல் சென்றுவிட்டனர்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு "இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட் டளை"த் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்றுள்ளதோடு, கோடிக் கணக்கான பணப் பரிவர்த்தனையும் செய்துள்ள அறக்கட்டளை ஆகும் இது.

பிரதமரின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் மகன் நடத்திவரும் அறக் கட்டளையில் மத்திய அமைச்சர்களே இயக்குநர்களாக இருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

காங்கிரஸ் கண்டனம்

பிரதமர் மோடியின் தேசிய பாது காப்புச் செயலாளர் அஜித் தோபாலின் மகன் நடத்தி வரும் அறக்கட்டளையில் இயக்குநர்களாக இருக்கும் அமைச் சர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென காங்கிரஸ் கட்சி, மோடியை வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவ ரான கபில் சிபல் கூறுகையில், "இந்தியா ஃபவுண்டேஷன் நிறுவனம்,  திசிஸிகி சட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் உரிமம்  வைத் திருக்கிறது. அறக்கட்டளையில் இயக் குநர்களாக உள்ள 4 அமைச்சர்களும் சட்டத்தை மீறியுள்ளனர்.  சட்டத்தின் பிரிவு 3-இன்படி, பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அர சியல் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு நிதி பெறும் அறக்கட்டளைகளில் தொடர்பு கொண் டிருக்கக் கூடாது.

இந்த அறக்கட்டளையில் இயக்குநர் களாக உள்ளவர்களில் 4 பேர் அமைச் சர்கள், ராம்மாதவ் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக  உள்ளார்.  தண்டனைக்குரிய குற்றம் செய்திருக்கின்றனர். இந்திய வரலாற்றில் எந்த அமைச்சராவது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இயக்குநராக இருந்துள்ளாரா? மோடி ஏன் இந்த விஷயத்தில் அமைதி யாக இருக்கிறார்?'' எனக் கேள்வி எழுப் பியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner