எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ.5 மோடி யின் குறைந்த அரசு, நிறைந்த ஆளுமை  வாக்குறுதி என்னவாயிற்று? மத்திய அரசின் கால தாமதங்களால் நெடுஞ்சாலைப் பணிகளில் 20 திட்டங்கள் நிறுத்தப்பட்ட அவலம்.

மத்தியப்பிரதேச மாநிலத் தில் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரலில் செயல்படுத்தத் தொடங்கப்பட்ட நான்கு வழி நெடுஞ்சாலைப் பணியில் ஒபெதுல்லாகஞ்ச்பிடல் பகுதி யில் நெடுஞ்சாலை 69இன்    பணிகளுக்கான ஒப்பந்தம் டிரான்ஸ்ஸ்டோரி லிமிடெட்  நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு, பணிகள் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதை யடுத்து, நெடுஞ்சாலை அமைப்பு மற்றும் பராமரிப்பு அமைப்பாகிய என்எச்ஏஅய் தற்போது அப்பகுதிக்கான நெடுஞ்சாலைப்பணிகளை நிறுத்திட உத்தரவிட்டுள்ளது.

இதைப்போலவே, எல் அண்ட் டி, எச்.சி.சி., எஸ்ஸெல் இன்ஃப்ரா, எம்.பி.எல் என்ஃப்ரா, சோமாஎண்டர பிரை சஸ் உள்ளிட்ட நிறுவனங்களி டம் அளிக்கப்பட்ட நெடுஞ்சாலைத் துறையின் பணிகளில் சுமார் 20 பணிகளுக்கான ஒப்பந்தத்தை நீக்கி உத்தரவிட் டுள்ளது.

நெடுஞ்சாலைப்பணிகளின் காலதாமதத்துக்கு விளக்கமளித் திட  நெடுஞ்சாலை பணிகள் அமைப்பு இறுதி நாளாக 6.11.2017அய்   ஒப்பந்த நிறுவ னங்களுக்கு கெடு விதித்துள்ளது.

பணிகளை நிறுத்தி, ஒப் பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட நிறுவனங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக என்எச்ஏஅய் நிறுவன அலு வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆட்சேபணைகள் இருப் பின் ஏன் ஒப்பந்தத்தை விலக் கிக்கொள்ளக் கூடாது என்று பதில் அளிக்குமாறு  நிறுவனங் களிடம் என்.எச்.ஏ.அய். அமைப்பு கோரியுள்ளது.

நான்கு வழிச்சாலைகளுக் கான ஒப்பந்த பணிகள் காங் கிரசு கட்சி தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்ட ணியின்போது நிறுவனங் களுக்கு அளிக்கப்பட்ட நிலை யில், 2014ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் தேதிக்குப் பின்னரே நெடுஞ்சாலைப்பணிகளில் நிறுவனங்களுடன் கொண்ட ஒப்பந்தப்பணிகள் நிறுத்தப் பட்டன.

கடந்த 2014ஆம் ஆண்டில் மேற்கு வங்கம், பீகார், குஜ ராத், ஒடிசா, கருநாடகா மற் றும் மத்தியப்பிரதேச மாநிலங் களில் நெடுஞ்சாலைப் பணி களுக்கான ஒப்பந்தம்  விலக்கிக் கொள்ளப் படுவதற்கான அறி விக்கை அனுப்பப்பட்டது. அதேபோல் கடந்த 2016ஆம் ஆண்டிலும் ஒப்பந்ததாரர் களுக்கு  அறிவிக்கை அனுப் பப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு நடை பெற்ற மக்களவைத் தேர்தலின் போது,  குறைந்த அரசு, நிறைந்த ஆளுமை எனும் முழக்கத்துடன் உறுதிகூறி மோடியின் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பின்னரே நெடுஞ்சாலைப்பணிகளில் பெருமள வில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. நிறுவனங்களின் ஒப்பந்தமும் விலக்கிக் கொள்ளப்பட்டுள் ளது. இதன்முலமாக பெருமள வில் பொருளாதார சேதாரங் களும், பணிகள் முடக்கமும் நடந்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner