எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின்  இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கம் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா

இராணிப்பேட்டை, நவ.5 இராணிப் பேட்டை பெல் நிறுவனத்தின்  இதர பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம் 05.10.2017 அன்று பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவாகளின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியது.

அன்று மாலை 6.30 மணி யளவில் இராணிப் பேட்டை பெல் நகரியப் பகுதியிலுள்ள மனமகிழ் மன்ற உள்ளரங்கில், "பெரியாரும் சமூக நீதியும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது.

தஞ்சை பெரியார் செல்வன் கலந்துகொண்டு இதுவரை "பெல்" நிறுவன ஊழியர்கள் கேட்டறி யாத, பெரியாரைப் பற்றிய, அவர் சமூகத்திற்காற்றிய மாபெரும் தொண்டினைப்பற்றி உணர்ச்சி பூர்வ மாக எடுத்துரைத்தார். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் உற்சாகத்தோடு கரவொலி எழுப்பி தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

இந்த கருத்தரங்கமானது இதர பிற்படுத்தப் பட்டோர் நலச் சங்க வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

கூட்டத்திற்கு சங்கத் தலைவர் கருப்பசாமி தலேமையேற்றார்.பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கத்தின் எல்ஓ ஜெயசேகர் ,ஆலோசகர் சுரேஷ்குமார்  மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 150-க்கும் மேற் பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனா.

இறுதியாக இணைச் செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.


தந்தை பெரியார் -  அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

பல்லாவரம், நவ. 5 பகுத்தறிவாளர் பேரவை, பம்மல், முதலாம் ஆண்டுவிழா மற்றும் தந்தை பெரியார் -அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா 29.10.2017 அன்று மாலை 6 மணிக்கு பம்மல் பொழிச்சலூர் சாலையிலுள்ள இம்மானுவேல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில் நடை பெற்றது.

பேரவைச் செயலாளர் சி.முத்தையா தலைமை ஏற்றார். பொருளாளர் வை.பார்த்திபன் வரவேற் புரை நிகழ்த்தினார். பெரியார் -அண்ணா குறித்து பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு ரொக்கப்பரிசும், புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பகுத்தறிவாளர் பேரவை தோழர்கள் கவிஞர் பூங்கணியனும், புலவர் த.வேலுவும் கவிதை வழங்கினார்கள் விழாச் சிறப்புரையாக திராவிடர் கழக வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் அண்ணா கண்ட பெரியார் என்ற தலைப்பில் பேருரையாற்றினார். அண்ணா பெரி யாரைச் சந்தித்த முதல் சந்திப்பில் தொடங்கி, நோய்வாய்ப்பட்டு அண்ணா அமெரிக்கா புறப் பட்ட பயண வழியனுப்புதல் முடிய உள்ள பல செய்திகளை சிறப்பாகவும், ஈடுபாட்டுடனும் எடுத்துரைத்தார்.

விழாவில் சென்னை மண்டல கழக தலைவர் தி.இரா.இரத்தினசாமி, தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், மாவட்ட பொருளாளர் மா.இராசு, பொழிசை கண்ணன், வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், செம்பியம் செயலாளர் டி.ஜி.அரசு, குரோம்பேட்டை. பகுத் தறிவாளர் கமலக்கண்ணன், க.இராசேந்திரன், பம்மல் கோபி, செம்பாக்கம் விஜய், கரைமாநகர் சுரேஷ், குன்றத்தூர் சரவணன், தாம்பரம் அப்துல் காதர், ஏசா, முத்தழகு மற்றும் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ்,   பம்மல் இலக்கிய மன்றத்தைச் சேர்ந்தவர்களும், பகுத்தறி வாளர் பேரவையின் உறுப்பினர்களும், பொதுமக் களும் திராளாகக் கலந்துகொண்டார்கள். பேரவைத் தலைவர் பொன்.இராமச்சந்திரன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner