எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை, நவ.5 கடந்த 29.10.2017 அன்று மாலை 6.30 மணியளவில் தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் தொடர் சொற்பொழிவு,  11ஆவது சிறப்புக் கூட்டம் மிகச்சிறப்புடன் நடைபெற்றது.

தஞ்சை உயிராற்றல் மாத இதழ் ஆசிரி யர் கா.அரங்கராசன் நிகழ்விற்கு தலைமை யேற்று உரையாற்றினார். மாவட்ட இளை ஞரணி துணைத் தலைவர் விஜயக்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றி னார். அம்மன்பேட்டை காந்தி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆ.கந்தவேல் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் ஆகி யோர் முன்னிலையேற்று உரையாற்றினார் கள். வாடகை பொருட்கள் அமைப் பாளர்கள் நலச்சங்கம், மாநில துணைச் செயலாளர், தஞ்சை மாவட்டச் செயலாளர் எஸ்.திங்கள் கண்ணன் தொடக்கவுரை யாற்றினார்.

திருக்குறள் ச.சோமசுந்தரம் உரை

தந்தை பெரியாரின் போர்வாள் எம்.ஆர்.ராதா என்னும் தலைப்பில் திருக்குறள் கல்வி மய்ய திருச்சி தஞ்சை மய்ய பொறுப்பாளர் திருக்குறள் ச.சோமசுந்தரம் அவர்கள் சிறப்புரையாற்றினார். எம்.ஆர்.ராதா அவர்கள் தந்தை பெரியார் கருத்துகளை நாடகம் மற்றும் திரைப்படம் மூலம் எப்படியெல்லாம் மக்கள் மத்தியில் பரப்பினார்; அதற்காக எந்த அளவு விளை வுகளை சந்தித்தார் என பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி உருக்கமான செய்திகளை கூறினார். ஒரு பயிற்சிப் பட்டறை போல் அமைந்தது. அவரது உரை தஞ்சை மாவட்ட ப.க. செயலாளர் ஆசிரியர் கோபு.பழனிவேல் தொகுத்து வழங்கினார். தஞ்சை மாவட்ட மாணவரணி அமைப்பா ளர் இரா.மணிகண்டன் நன்றி கூறினார். நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட் அமைப்பாளர் ப.தேசிங்கு, கழகச் சொற்பொழிவாளர் பூவை.புலிகேசி, மாநகரத் தலைவர் ப.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தங்க.வெற்றிவேந்தன், செயலா ளர் மீ.அழகர்சாமி, அமைப்பாளர் செழி யன், தங்கமாளிகை உரிமையாளர் மா. இளங்செழியன், பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், மாநில மகளிரணி செய லாளர் அ.கலைச்செல்வி, குடந்தை மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயமணி குமார், ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், படிப்பக வாசகர் முருகானந்தம், சமரசம், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் கவிஞர் துரை.சித்தார்த்தன், பெரியார் பெருந்தொண்டர் தண்டாயுதபாணி, தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வன், தஞ்சை தமிழய்யா கந்தசாமி, மாவட்ட இளை ஞரணி செயலாளர் வே.இராஜவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.வெற்றிக்குமார், பெரியார் பிஞ்சுகள் ஜெ.ஜெ.கவின், ஜெ.ஜெ.காவியா உள் ளிட்ட படிப்பக வாசகர்கள், கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner