எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரதமர் மோடியின் தொகுதியான

வாரணாசி பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தேர்தலில்

ஏபிவிபி (ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பு) படுதோல்வி!

வாரணாசி, நவ.6 உ.பி. மாநிலம் வாரணாசியில் உள்ள மாநில பல்லைக்கழகமான மகாத்மா காந்தி காசி வித்யாபீட  மாணவர் அமைப்பு தேர்தலில் ஓரிடத்தில்கூட ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபி விபி வெற்றி பெறவில்லை; சமாஜ்வாடி கட்சியின் மாணவர் அணியான சமாஜ்வாடி சத்ரசபா (எஸ்சிஎஸ்) சார்பில் போட்டியிட்டவர்கள் துணைத் தலைவர் மற்றும் நூலகச் செயலாளர் பதவிகளில் வெற்றி பெற்றுள் ளனர்.

இந்த ஆண்டு பொது வேட் பாளர்களை சமாஜ்வாடி சத்ர சபா மற்றும் காங்கிரஸ் கட்சி யின் மாணவர் அணியான என் எஸ்யுஅய் ஆகியவை ஆதரித் திருந்தன. ஏபிவிபி கடந்த ஆண்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு பதவியான பொதுச் செய லாளர் பதவியைக்கூட இந்த ஆண்டு தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற ராகுல் துபே 2,365 வாக்குகளே பெற்றார். ஏபிவிபி வேட்பாளர் வால்மீகி உபத்யாய் 1,398 வாக்குகள் பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு என்எஸ்யுஅய் மற்றும் எஸ்சிஎஸ் ஆதரவுடன் போட்டியிட்ட ரோஷன்குமார் 3,185 வாக்குகள் பெற்றார். ஏபிவிபி வேட்பாளர் தயா சங்கர் யாதவ் 1,458 வாக்குகளே பெற்றார்.

பொதுச் செயலாளர் பத விக்கு வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் அனில்யாதவ் 2,842 வாக்குகள் பெற்றார். ஏபிவிபி வேட்பாளர் அன்கிதா சிங் 1,690 வாக்குகள் பெற்றார். நூலகச் செயலாளர் பதவிக்கு என்எஸ் யுஅய் மற்றும் எஸ்சிஎஸ் ஆதரவுடன் போட்டியிட்ட ரவி பிரதாப் சிங் 2,084 வாக்குகள் பெற்றார். ஏபிவிபி வேட்பாளர் சர்வேஷ் பதாக் 631 வாக்குகள் பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது என்எஸ் யுஅய், எஸ்சிஎஸ் ஆதரவாளர் களுக்கும், ஏபிவிபி ஆதரவாளர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்கு களைப் பதிவு செய்துள்ளனர்.

டில்லி, அலிகார், ஜவகர் லால் நேரு, அய்தராபாத் பல் கலைக்கழகம் பாட்னா உள் ளிட்ட நாடு முழுவதும் பல் வேறு பல்கலைக்கழகங்களில் நடந்த மாணவர் தேர்தலில் இடதுசாரி அமைப்புகள் தொடர் வெற்றி பெற்றன.  அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி இந்து அமைப்புகளின் கோட் டையாக திகழ்ந்த அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் ஏபி விபி படுதோல்வி அடைந்தது.

இது தொடர்பாக பாஜக தலைமையகத்தின் முன்பு மோடி தலைமையிலான அர சின் மாணவர்களுக்கு எதிரான செயல்பாடுகளால் நாங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறோம் என்று  அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது, தற்போது வாரணாசி பல் கலைக்கழகத்திலும் தோல்வி ஏற்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner