எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிஜேபியின் கிளை அதிமுக?

கோவையை அடுத்த பாப்பம்பட்டியில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோலப் போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்  கனகராஜ் கூறியது சுவையானது.

கோலப் போட்டியில்  தாமரையை வரைந்து மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

தாமரையை வரைந்து அதன் கிளைகளாக இரட்டை இலையை வரைந்து மக்கள் தங்கள் எண்ணங்களைத் தெரிவித்துள்ளனர். நாங்கள் அதையே தான் விரும்புகிறோம். அதுகுறித்து அதிமுக தலைமை உரிய நேரத்தில் முடிவை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

(ஏன் இதோடு நிறுத்திக் கொண்டார் அமைச்சர்? பிஜேபிக்குப் பல பெயர்களில் கிளைகள் உண்டு, அதில் ஒன்று அதிமுக என்று சொன்னால்  போச்சு!).

=============================

மகளிர் இடஒதுக்கீடு : பிஜேபி?

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டில் பிஜேபியின் நிலைப்பாடு என்ன? இது குறித்து இமாசலப் பிரதேச முதல் அமைச்சர் வீரபத்ரசிங் கூறுகிறார்.

மகளிர்  இடஒதுக்கீடு மசோதா 2010 மார்ச்சு 9 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இப்பொழுது பிஜேபிக்கு இருக்கும் பெரும் பான்மையைப் பயன்படுத்தி பிரதமர் மோடி இந்த மசோதாவை நிறை வேற்ற முடியும். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா அவர்களும், பிரதமருக்கு 21.9.2017 அன்று கடிதம் எழுதியும் மோடிக்கு மனமில்லை; பெண்களுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்து வருகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner