எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிம்லா, நவ.8 ஊழல்பற்றி பேசும் பிரதமர் மோடி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழல்கள்பற்றி வாய்த் திறப்பதில்லை என்று காங்கிரசு துணைத் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தி இமாச்சலப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பவாண்டோ சாகிப் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

2019- ஆம் ஆண்டு காங்கிரசு ஆட் சிக்கு வந்ததற்கு பிறகு ஜி.எஸ்.டி. வரி முறையில் முற்றிலும் சீரமைப்பு செய் யப்படும்.

மேலும் அடுத்து நடக்க கூடிய ஜி.எஸ்.டி. நிதி அமைச்சர்கள் கூட்டத் தில் காங்கிரசு ஆளும் மாநிலங்கள் ஜி.எஸ்.டி. சீரமைப்புகளை கொண்டு வந்துசிறுதொழில்கள்மற்றும்மறை முக தொழில்களை பாதுகாக்க வற் புறுத்தப்படும்.

சீனாவில் தினமும் 50 ஆயிரம் இளை ஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பேன் என்று பாரதீய ஜனதா 2016 தேர்தல் வாக்குறுதியில் கூறியது.

இப்போது இவர்கள் தினமும் 450 பேருக்குத்தான் வேலைவாய்ப்பு உரு வாக்கி கொடுக்கிறார்கள். மத்திய அரசு இளைஞர்களை ஏமாற்றி விட்டது.

இரண்டு வகை மக்கள்

இந்திரா காந்தி 2 வகை மக்கள் இருப்பதாக கூறுவார். ஒரு வகை மக்கள்உழைப்பைமட்டும் நம்புபவர் கள். இன்னொரு வகை மக்களுக்கு உழைப்பின்மீது நம்பிக்கை இருப்ப தில்லை. ஆனால், விரைவாக பலன் கிடைக்கவேண்டும் என்று இருப்பார் கள். இதேபோன்றுதான் மோடியும் இருக்கிறார்.

இந்தியாவில்தயாரிக்கப்படும்செல் போன்களை சீன இளைஞர்கள்கையில் எடுத்துக்கொண்டு செல்பி படங்கள் எடுப்பதைப்பார்க்கவேண்டியநாள் வரவேண்டும் என்று நான் விரும்புகி றேன்.

பிரதமர் மோடி ஒரு சில ஊழல் விவகாரங்களை மட்டும் கையில் எடுத்து பேசுகிறார். மற்ற ஊழல் விஷயங்களில் மவுனமாக இருக்கிறார். வியாபம் ஊழல், லலித் மோடி ஊழல், மற்றும் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல்கள்பற்றி அவர் வாய் திறப்பது இல்லை.

அதுபோல் அமித்ஷா மகன் ஜெய்ஷா மற்றும் மோடியின் கோடீசுவர நண்பர்கள் விவகாரம் பற்றியும் எதுவும் பேசுவதில்லை.

நாராயணரானே, பாதல், அனுராக் தாகூர், இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் போன்றவை பற்றி ஒரு நாளும் பேசியதில்லை.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இதனால் ஏழைகள் பயன் அடைந்தார்கள். ஆனால், தற்போதைய அரசு இந்தப் பணத்தை நானோ கார் தயாரிக்கக் கொடுக்கிறது.

இவ்வாறு காங்கிரசு துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner