எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பால்சோர், நவ.8  இந்தியாவில் தயாரான நிர்பய் ஏவுகணை, ஒடிசா மாநிலம் பால்சோரில் 5- ஆவது முறையாக சோதிக்கப்பட்டது.

நிர்பய் என்ற ஏவுகணையை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் தயாரித்து உள்ளது. 300 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை சுமந்து நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை பெற்ற இந்த ஏவுகணை கடந்த 2013- ஆம் ஆண்டு முதல் 4 முறை சோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு முறை மட்டுமே சோதனை வெற்றியில் முடிவடைந்தது. இந்த நிலையில் ஒடிசா மாநிலம் பால்சோர் அருகே உள்ள சாண்டிபுர் கடற்கரை பகுதியில் நேற்று காலை 5- ஆவது முறையாக நிர்பய் ஏவுகணை செலுத்தி சோதிக்கப்பட்டது.

இந்த சோதனையின் தொடக்கம் வெற்றிகரமாக நடந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner