எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டில்லி, நவ 9 "இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்  மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்துப் பேசுவதற்கு மோடி யும், அமித்ஷாவும் அஞ்சு கின்றனர்" என்று ஆங்கில நாளேடு ஒன்று அவர்களுடைய பேச்சுக்களை ஒப்பிட்டு எழுதி யுள்ளது.

ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை உருவாக்கிய எதிர் வினைகளைக் கண்டு தேர்தல் நேரங்களில் இது குறித்து அமித்ஷா மற்றும் மோடி ஆகி யோர் மேடைகளில் பேசுவ தற்கு அஞ்சுகின்றனர்.

மோடியின் இந்த நட வடிக்கை  கருப்புப் பண முதலைகளுக்கு  மாபெரும் அடி என பலராலும் புகழப் பட்டது.  இந்த நடவடிக்கையை பற்றி மோடி, அமித்ஷா உள் ளிட்ட பல பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை உற்சாக மாகப் பேசி வந்தனர். ஆனால் சமீபகாலமாக பணமதிப்பி ழப்பு நடவடிக்கைப் பற்றி மோடி, அமித்ஷா வாய்க்கூட திறப்பதில்லை.

இது குறித்து எழுதியுள்ள ஆங்கில நாளேட்டின் அறிக்கை யில் "பணமதிப்பு இழப்பு நடவடிக்கை குறித்து கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி வரையில் மோடி யும் அமித்ஷாவும்  தங்களது 24 உரைகளில் 54 முறை குறிப் பிட்டுள்ளனர். ஆனால் தற் போதைய குஜராத்  மற்றும் இமாசலப் பிரதேச தேர்தல் பிரச்சார பேரணிகளில் பண மதிப்பிழப்பு பற்றிப் பேசுவதை மிகவும் கவனமாக தவிர்த்து விடுகின்றனர்" என குறிப் பிட்டுள்ளது.

"ரிசர்வ் வங்கியின் ஆண் டறிக்கை வந்ததும் மோடியின் நடவடிக்கை மோசடி என்பது தெளிவாகிவிட்டது. இம்முறை வெகுஜனமக்களிடையே மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து வெறுப்பு எழுந்துள்ளது. இதன் காரண மாகவே பணமதிப்பிழப்பு நட வடிக்கை பற்றிக் குறிப்பிடு வதை இருவரும் தவிர்க்கின் றனர். முக்கியமாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது  இருவரும்  பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றிப் பேசுவதே இல்லை" எனவும் தெரிவித் துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner