எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செல்லாத ரூபாய் நோட்டுத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தையே அழித்து விட்டது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும்,  15 லட்சம் பேர் வேலை வாய்ப்பையும் பறித்து விட்டது.
- ராகுல்காந்தி

அ.இ. காங்கிரசு துணைத் தலைவர்

மத்திய பிஜேபி ஆட்சியின் ரூபாய் மதிப்பு நீக்க நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிட எளிதான வழியாகிவிட்டது. ஏழைகள் ஏமாற்றப்பட்டனர்.
- லாலுபிரசாத்

தலைவர், ராஷ்ட்ரிய ஜனதா தளம்

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் மூலம்  நாட்டில் கறுப்புப் பணம், கள்ள ரூபாய் நோட்டு ஒழியும் என்றும், தீவிரவாதிகள் கையில் இருக்கும் பணம் அனைத்தும் வெளியில் வரும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி கூறினார். இன்று எதுவுமே நடக்கவில்லை. ரூ.15 லட்சம் கோடியில் வெறும் ரூ.17 ஆயிரம் கோடி கறுப்புப் பணம்தான் திரும்ப வந்துள்ளது. பெரும் பணக்காரர்கள் தங்கள் வசமிருந்த கறுப்புப் பணத்தை வங்கிகளில் செலுத்தி வெள்ளைப் பணமாக்கி விட்டனர். ஆனால் வியாபாரிகள், சிறு தொழில்காரர்கள் தான் இதனால் பாதிக்கப்பட்டனர்.
- வி. நாராயணசாமி

முதல் அமைச்சர், புதுச்சேரி மாநிலம்

பிரதமரை அரசியலுக்காகப் பயன்படுத்த எந்த நேரத்திலும் ,எந்த நிமிடத்திலும் நாங்கள் தயாராக இல்லை.  இன்றைக்கு அரசியலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென சிலர் திட்டமிடுகிறார்கள் - அவர்களின் கனவு நிச்சயம் பலிக்காது என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெளிவுபடுத்துகிறேன்.
- தளபதி மு.க. ஸ்டாலின்
செயல் தலைவர், தி.மு.க.
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner