எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, நவ.10 வரு மானவரித்துறையினர் சோதனை செய்த போது, இனிமேல் இது போன்று சோதனை நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் பாஜக விற்கு வந்துவிட வேண்டும் என்று கருநாடக காங்கிரசு அமைச்சரை மத்திய அரசின் அதிகாரிகள் மிரட்டியதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மோடி, தனக்கு எதிராக செயல்படுபவர்கள், தனக்கு ஆதரவு தரமறுக்கும் அரசியல் தலைவர்களை வருமான வரித் துறை சோதனை, சி.பி.அய். சோதனை போன்றவற்றை வைத்து மிரட்டி அடிபணிய வைத்துக்கொண்டிருக்கிறார். பலர் மத்திய அரசின் இந்த மிரட்டலுக்கு அடிபணிந்து மோடிக்கு பணிந்து சென்றுவிடு கின்றனர். இப்படியான ஒரு மிரட்டலில் தான் பீகார் முதல் வர் நிதீஷ்குமாரும் மக்கள் தீர்ப்பிற்கு எதிராக லாலுபிரசாத் உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு  பாஜகவுடன் கூட் டணி வைத்துள்ளார்.

தமிழகம் மற்றும் கருநாட கத்தில் இதே போன்ற சோதனை களை நடத்தினர். இவர்களின் மிரட்டலில் தமிழக அ.தி.மு.க தலைமையிலான பல்வேறு அமைச்சர்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசின் கைப்பாவை யாகவே மாறிவிட்டனர்.  கருநாட காவிலும் இதே போன்ற சோதனையை நடத்தி காங்கிரசு அமைச்சர்களை பாஜகவிற்கு இழுக்கும் வேலையைச் செய்ய முயன்றதை கருநாடக முதல் வர் சித்தராமையா சான்றுகளு டன் வெளியிட்டுள்ளார்.

குஜராத் மாநிலங்களவை தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.  அதில் காங் கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்தால் அங்கு காங்கிரசு கட்சி சார்பாக நிறுத்தப்பட் டுள்ள அகமதுபடேல் வெற்றி பெற்றுவிடுவார், அகமது படேலின் வெற்றியைத் தடுக் கும் விதமாக அமித்ஷா குஜராத் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக் கணக்கில் பணம் தந்து சில ரைத் தங்கள் பக்கம் இழுக்க முயன்றார். இந்த உண்மையைத் தெரிந்துகொண்ட குஜராத் காங்கிரசு கட்சி தனது சட்ட மன்ற உறுப்பினர்கள் அனை வரையும்  கருநாடகாவிற்கு அழைத்துச்சென்று தங்க வைத்தது.

அந்த சட்டமன்ற உறுப் பினர்களுக்குத் தேவையான உதவிகளை கர்நாடக மாநில மின்துறை அமைச்சர் செய்து கொடுத்தார். அவருக்குச் சொந்தமான பண்ணைவீட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் சிவக்குமார் வீடுகள், அலுவல கங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற் கொண்டனர். பின்னர் அவ ரிடம் விசாரணையையும் மேற் கொள்ளப்பட்டது.

அப்போது இது போன்ற சோதனைகளை எதிர் கொள் ளாமல் இருக்கவேண்டுமென் றால் நீங்கள் பாஜகவில் சேர்ந்து விடுங்கள் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் மிரட்டி யுள்ளனர். இதுகுறித்து பெங் ளூருவில்  பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து நடந்த கருப்பு தின பொதுக் கூட்டத்தில் பேசிய சித்த ராமையா கூறியதாவது:

"வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, சிபிஅய் ஆகியவை மக்களை மிரட்டுவ தற்காகப் பயன்படுத்தப்படு கின்றன. அரசியல் உள்நோக் கத்துடன் அமைச்சர் சிவக் குமார் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடை பெற்றது. அப்போது சோத னையை தவிர்க்க தொண்டர் களுடன் பாஜக.வில் சேர்ந்து விடுங்கள் என்று சிவக்குமாரி டம் வருமான வரித்துறை அதி காரிகள் கூறியுள்ளனர் இதற் கான ஆதாரங்கள் என்னிடம் தரப்பட்டது. மத்திய அரசு இவ்வளவு தரம் தாழ்ந்து நடக் கும்  என்று எதிர்பார்க்கவில்லை. எதிர்கட்சிகளின் பிரமுகர்களை மிரட்ட இதுபோன்ற செயல் களைச் செய்து வருகிறது" என்று கூறிய சித்தராமையா எவ்வித முன்னெச்சரிக்கை நட வடிக்கையும் எடுக்காமல் பண மதிப்பிழப்பு கொண்டுவந்தது மிகவும் மோசமான செயலாகும் என்றும் மோடியைக் கடுமை யாகச் சாடினார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner