எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கண்ணூர், நவ 10  கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். செயலாளர் வீட்டில் நடந்த வெடிவிபத்திற்கு பிறகு நடத்திய சோதனையில் பெருமளவு வெடிகுண்டுகள் செய்ய பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பெரும் வன்முறையை உருவாக்க நினைத்த ஆர்.எஸ்.எசின் திட்டம் நிறைவேறாமல் போனது.


வடகேரளத்தில் பெரிய நகரங்களில் ஒன்றான கண்ணூரை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். செயலாளர் வளையகண்டான் ரகு. இவர் கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மிக முக்கியமான பிரமுகர்களில் இரண்டாமிடத்தில் உள்ளவர். இவருக்குச்சொந்தமாக கருநாடகா மற்றும் கேரளாவில் பல தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிலையில் கண்ணூரில் உள்ள இவருக்குச்  சொந்தமான பண்ணைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டது.  
மேலும் இந்த வெடிவிபத்தில் அருகில் உள்ள வீடுகளும் சேதமடைந்தன. முதலில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என்று நினைத்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலை அடுத்து தீயணைப்புத்துறை, காவல்துறையினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர். பிறகு வீட்டில் சோதனை செய்த போது எரிவாயு சிலிண்டரால் ஏற்பட்ட விபத்து அல்ல  எனவும், வெடிமருந்தால் நடந்த விபத்து என்றும் தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் அப்பகுதியை சோதனையிட்டபோது பாதுகாப்பாக வைக்கப்பட்ட பெட்டகத்தில் இருந்து  கிலோக்கணக்கில் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.


அங்கு கிடைத்த சில குறிப்புகளின் அடிப்படையில் பல இடங்களில் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்ட பிறகு வீட்டில் இருந்த அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.


இதே பகுதியில் கோட்டத்தி வைரிகதாக்கன் பகவதி கோவில் அருகில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்தும் பெருமளவில் வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் வாளியிலும் சாக்குப்பையிலும் சாக்குத் துணிகளால் சுற்றி வைக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கிலும் வளையகண்டார் ரகுவை காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.


கேரள மாநிலத்தில் பாஜகவும், சங்பரிவார் அமைப்புகளும் இணைந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறைச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியபிரமுகர் வீட்டிலிருந்து பெருமளவில் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மாநிலத்தில் பெருமளவில் வன்முறையை தூண்ட சங்பரிவார் தயாராகி வருவது வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விட்டதே.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner