எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, நவ.11 ஜி.எஸ்.டி. வரி குறைப்பு என்பது  தேர்தல் கண் ணோட்டத்திற்காக செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

நேற்று (10.11.2017) திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து வரி குறைக்கப் பட்டிருக்கிறதே...?

தமிழர் தலைவர்:  ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்தும்பொழுதுகூட ஒரு நிலை, அதற்குக் கீழே, அதற்கு மேலே என்று மூன்று நிலைகளைத்தான் வைத்திருந்தார்கள். ஆனால், இவர்கள் அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோல, பூஜ்ஜியத்திலிருந்து 28 சதவிகிதம் வரை என்றும், சில இடங்களில் 40 சதவிகிதம் வரையில் போகக்கூடிய அளவில் இருந்தது. ஆனால், இப்பொழுது குஜராத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவேதான், ஜி.எஸ்.டி.க்கு ஓரளவிற்கு இப்பொழுது விடிவு வந்திருக்கிறது.

வியாபாரிகள், அதேபோல, பொருளாதார நிபுணர்களை வைத்து இன்னும் சரிபடுத்தவேண்டும். இது தேர்தலுக்காகக் கொடுக்கப்பட்ட ஒரு சலுகையாக ஆகிவிடக்கூடாது. பெட்ரோல் விலை போன்று அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தால், மக்களுக்கும், மற்றவர்களுக்கும் சங்கடமாக இருக்கும்.

ஜி.எஸ்.டி.யின் விளைவுகள் திருப்பூரை எந்த அளவிற்குப் பாதித் திருக்கிறது என்றால்,  42 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டு, திருப்பூர் இருப்பூராக இல்லாமல், வெறும் கருப்பூராக மாறக்கூடிய அளவிற்கு இருக்கிறது.

எனவேதான்,  இந்த மறுபரிசீலனை என்பது இருக்கிறதே, நல்ல பொரு ளாதார நிபுணர்களை அழைத்து, அதில் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், வியாபாரிகளான அனுபவம் உள்ளவர்களையும், சிறு குறு வியாபாரிகளையும் வைத்து செய்ய வேண்டுமே தவிர, தேர்தல் கண்ணோட்டத்திற்காக செய்யப்பட்ட அவசர ஏற்பாடாக இது அமைந்துவிடக் கூடாது.

செய்தியாளர்: கலைஞர் அவர் களோடு மோடி சந்திப்பு தி.மு.க.விற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தொல்.திருமாவளவன் சொல்லியிருக்கிறாரே...?

தமிழர் தலைவர்: அது அவருடைய கருத்து. இதனை அவரிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும்.

செய்தியாளர்: பெட்ரோல் விலையை வியாபாரிகள் தீர்மானிப்பது போன்று, விவசாயிகள் அவர்களுடைய விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே...?

தமிழர் தலைவர்: விவ சாயிகளின் போதுமான அள விற்கு, அவர்களுடைய விளை பொருள்களுக்கு உத்தரவாதம் இருக்கவேண்டும். இடைத்தரகர்களை ஒழித்துவிட்டு, அரசாங்கத்தின் சார்பில் பொது அமைப்புகளை உருவாக்கவேண்டும்; நியாயமான விலை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அதற்குரிய வாய்ப்புகளைப் பற்றி சிந்திக்கவேண்டும். அதன் மூலமாக விவசாயிகளின் தற் கொலைகள் தடுக்கப்படும்.

-  இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடம் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner