எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜி.எஸ்.டி.யை புரிந்து கொள்ள முடியவில்லை

கூறுகிறார் ம.பி. பா.ஜ.க. அமைச்சர்

போபால், நவ. 11 -ஜிஎஸ்டி வரி விதிப்பு ஒரே குழப்பமாக இருப்ப தாகவும், ஒன்றுமே புரியவில்லை எனவும் மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே, வெளிப்படையாக பேசியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் அம்மாநில பாஜக அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரியை தம்மால் இது வரை புரிந்துகொள்ள இயலவில்லை என்று கூறியுள்ளார். மேலும், ஜிஎஸ்டி-யைப் புரிந்துகொள்வதில் கணக்குத் தணிக்கையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்குக்கூட சிரமம் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஓம் பிரகாஷின் இந்தப் பேச்சு, பாஜக-வினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

  

 

இயலாமையை ஏற்றுக் கொள்ளுங்கள்

மக்கள் குரலுக்கு செவி சாயுங்கள்

மத்திய அரசுக்கு ராகுல் அறிவுரை

புதுடில்லி, நவ.11 அகந்தையை குறைத்துக் கொண்டு மக்கள் குரலுக்கு செவி சாயுங்கள் என்று மத்திய அரசை ராகுல் வலியுறுத்தி யுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி.யை அமல் படுத்தியது. இதற்கு காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந் நிலையில், காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை மீண்டும் குற்றம்சாட்டி டிவிட் செய்துள்ளார். டிவிட்டரில் அவர் வெளியிட்ட தக வலில், கபார் சிங் வரி விதிப்பை மக்கள் மீது பாஜக திணிப் பதை காங்கிரசு ஒரு போதும் அனுமதிக்காது. அவர்கள் மீண்டும் சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களை அழிப்பதை ஏற்க முடியாது. ஜிஎஸ்டி.யால் பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

போலியான வார்த்தைகள் மூலம் நாட்டு மக்களின் நேரத்தை அரசு வீணடிக்கக் கூடாது. அடிப்படை குறை பாட்டை சரி செய்து, மக்களுக்கு எளிய வரி விதிப்பை தாருங்கள். உங்கள் இயலாமையை ஏற்றுக் கொள்ளுங்கள், உங்கள் அகந்தையை குறைத்து கொண்டு மக்களின் குரலுக்கு செவி சாயுங்கள் என்று கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner