எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

"இந்தியாவிலேயே சமுதாயத் துறைக்காக நான் ஒருவன்தான், நம் இயக்கம் ஒன்றுதான் பாடுபட்டு வரு கிறது.

இந்த நாட்டில் பதவிக்கு, பணம் சேர்க்க, உத்தியோகத் திற்கு ஆள் நிறைய இருக் கிறார்கள்.

தினம் காலையில் 10,20 பேர் பட்டையையும், நாமத் தையும் போட்டுக் கொண்டு என்னிடம் சிபாரிசுக்கு வருகின்றார்கள்.

எனக்கு உத்தியோக உயர்வு வேண்டும், மாற்றம் வேண்டும் என்று கேட்கின் றார்கள்.

இன்னும் 4 நாட்கள் கழித்து வந்து பாருங்கள் என்றால்,

அப்போது நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று கேட் கின்றார்கள்.

"விடுதலை"யைப் பாருங்கள் தெரியும் என்றால்,

"விடுதலை" என்றால் என்ன?

அந்தப் பேப்பர் எங்கே கிடைக்கும் என்று கேட்கின் றார்கள்.

இப்படி இயக்கத்தைப் பற்றி, கொள்கையைப் பற்றி, நம் பத்திரிக்கையைப் பற்றி ஒன்று கூடத் தெரியாதவர்கள் எல்லாம் சிபார்சுக்கு வரு கின்றார்கள்.

அவர்களை நான் குறை சொல்லவில்லை. நம் மக்கள் நிலை அப்படி இருக்கிறது. நம் மக்கள் உத்தியோகம், பதவியென்றால் எதையும் பார்ப்பது கிடையாது.

சமுதாயத்தைப்பற்றி நினைப்பதுக்கூடக் கிடை யாது; தானும் தம் குடும் பத்தாரும் வாழ்ந்தால் போதும் என்றிருக்கிறார்கள்"

- தந்தை பெரியார்

('விடுதலை' 16.11.1969)

உண்மை நிலையைத் தான்  தந்தை பெரியார் தம் அனுபவக் கடலிலிருந்து எடுத்துக் கூறி இருக்கிறார். கொஞ்சம் நினைத்துப் பார்க்கட்டும்! இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு வருவதற்கும், நிலைப்பதற்கும் யார் காரணம்?

தமிழ்நாட்டில் சங்பரிவார், வேர் பிடிக்காமல் இருப்ப தற்குக் காரணம்  எந்த தத்துவம்? தொடர் பிரச்சாரம் செய்து வருபவர்கள் யார்? ஒரு கணம் சிந்திப்பீர்! மீண்டும் மனுதர்மக் கொடி ஏறாமல் இருக்க வேண்டுமானால்,  'விடுதலை' என்னும் போரா யுதத்தைத் தூக்கிப் பிடிப்பீர்! ஒரு  குடும்பத்துக்கு ஒரு 'விடுதலை' - தலை கீழ்ப் புரட்சியை ஏற்படுத்துமே!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner