எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

போபால், நவ. 12 மத்தி யப்பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநில எல்லையில் உள்ள சித்திரகூட் சட்டமன்ற தொகுதியில் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரேம் சிங் தயாள் கடந்த மே மாதம் மாரடைப்பால் இறந்தார். இதனால் அந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 9 ஆம் தேதி நடந்த வாக்குப் பதிவின் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. துவக்கம்  முதலே காங்கிரசு முன் னணியில் இருந்து வந்தது. இந்த நிலையில் சித்திரகூட் தொகுதி காங்கிரசு வசம் ஆனது.

சில நாள்களுக்கு முன்பு உ.பி. சாமியார் முதல்வர் ஆதித் யநாத் இங்குவந்து கோவிலில் சாமி தரிசனம் செய்து பொதுக் கூட்டம் ஒன்றையும் நடத்தி விட்டுச் சென்றார்.

இந்த சட்டமன்ற தொகுதி யில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங்சவுகான் மற்றும் உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா போன்றோர் தொடர்ந்து 5 நாள்கள் பிரச்சாரம் செய்தனர் என்பதும் குறிப் பிடத்தக்கது. கடந்த 9-ஆம் தேதி நடந்த இந்த தொகுதி வாக்குப் பதிவின் போது ஆளும் பாஜக சார்பில் கோவில்களில் வாக் காளர்களுக்கு உணவு வழங்  கியது குறித்து காங்கிரசு  சார்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner