எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

மதுரா, நவ. 12  மதுராவில் உள்ள வர்சானா பாலகிருஷ்ண கோவிலில் தினசரி  ராதாராணி  என்று அழைக்கப்படும் மூலவர் சிலைக்கு முதல் நாள் சூட்டிய மாலை, ஆடை போன் றவற்றை எடுத்து மறுநாள் காலை வரும் பக்தர்களுக்கு கொடுப்பது வழக்கம். இதை சப்பன் போக் என்று கூறு வார்கள். இதற்காக பெரும் தொகை வசூலிக்கப் பட்டது, இதை வசூலிப்பதில் பார்ப் பனப் பூசாரிக்குள்ளாகவே ஒரு திட்டம் வகுத்து அதன் படி வசூலித்து வந்தனர்.

இந்த நிலையில்   கடந்த 10ஆம் தேதி காலை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கிருஷ்ண தாஸ் என்ற பார்ப்பனர், சப்பன் போக் கொடுத்து பணம் வசூலித்துக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் அங்கு வந்த சஞ்சய் தாஸ் என்ற பார்ப்பனர்,  முதல் நாள் நாங்கள் குறிப்பிட்ட தொகை வாங்கிக் கொண்டு சப்பன் போக் செய்தோம். ஆனால் இன்று நீ எங் களைவிட அதிகமாக வசூலிக் கிறாய், ஆகவே அதில் எங்களுக்கும் பங்குகொடு என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டார். பக்தர்கள் பெரும் திரளாக இருந்தபோது கோவில் கரு வறைக்குள்ளேயே ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள ஆரம் பித்தனர். இதில் சாமிக்கு வைத்திருத்த தீபாரா தனைத் தட்டினால் சஞ்சய் தாஸ் தலையில் கிருஷ்ணதாஸ் அடித்துவிட்டார். அவரும் பதி லுக்கு சிலையின் கையில் இருந்த தண்டத்தை எடுத்து அடிக்கத்துவங்கினார். அங்கி ருந்த பக்தர்கள், இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது பக்தர்களைப் பார்த்து  நேற்று எனக்கு குறைந்த தொகை கொடுத்தீர்கள், இன்று இவருக்கு மட்டும் அதிகமாக பணம் கொடுக்கிறீர்கள் என்று கொச்சை வார்த்தைகளால், சஞ்சய்தாஸ் பேச ஆரம்பித்து விட் டார்.

கோவில் கருவறைக்குள் இரண்டு பூசாரிகள் சண்டையிடுவதையும் பக்தர்களைக் கொச்சை வார்த்தைகளில் திட்டு வதையும் பார்த்த கோவில் நிர்வாகம் வர்சனா காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தது. இதனை அடுத்து காவல்துறையினர் கோவிலுக்கு வந்து சண்டையிட்டுக்கொண்டு இருந்த இரண்டு பார்ப்பன பூசாரிகளைக் கைது செய்தனர்.  இவர்களின் சண்டையின் காரணமாக ராதாராணி சிலை யின் தலையில் சூட்டியிருந்த மகுடம் உடைந்தது, பளிங்கி னால் ஆன மூலவர் சிலையும்   சேதமடைந்தது. மேலும் பல ஆண்டுகளாக ராதையின் கையில் வைத்திருந்த தண்ட மும் சேதமடைந்தது. கோவி லில் நடந்த இந்தச்சம்பவம் குறித்து கோவில் தலைமை நிர்வாகி மன்மோகன் கோஸ் சுவாமி பொதுமக்களிடம் மன் னிப்புக் கேட்டுக்கொண்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner