எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யாரிடமிருந்து குஜராத்தைக் காப்பாற்ற வேண்டுமாம்?

பிரதமர் நரேந்திர மோடி - பிலிப்பைன்ஸ் செல்லுவதற்கு முன் தனது டுவிட்டரில் பதிவு செய்தது என்ன? "குஜராத் மக்களே! குஜராத்தைக் காப்பாற்றிட முன் வாருங்கள்" என்று பதிவு செய்துள்ளார். ரொம்ப சரி! கடந்த 20 ஆண்டுகளாக குஜராத்  பிஜேபி ஆட்சியில்தானே இருந்து வருகிறது! இதில் பெரும்பாலும் மோடியே முதல் அமைச்சராகவும் இருந்து வந்துள்ளார். அப்படியானால் மோடி என்ன சொல்லுகிறார்? குஜராத் மக்களே 20 ஆண்டுகளாக குஜராத்தை பிஜேபி காப்பாற்றவில்லை ஆதலால் காங்கிரசிடமே ஒப்படையுங்கள் என்று சொல்லுவதாகத் தானே பொருள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner