எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவின் முதல் பிரதம ரான ஜவகர்லால் நேரு அவர்களின் 129ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் இந்த நாளில் அவர்தம் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு நடைபெறும். குழந்தைகள் தினமாக வும் அரசு சார்பில் கடைப் பிடிக்கப்படுகிறது. குழந்தைகள்மீது அவருக்குக் கொள்ளை ஆசை "நேரு மாமா" என்று குழந்தைகள் செல்லமாகக் கொஞ்சுவார்கள். உலக அளவில் கூட்டு சேரா அணி ஒன்றை உருவாக்கி ஒரு தனித் தன்மையை உருவாக்கியவர் (இன்று?)

அவரைப்பற்றி ஓர் அரிய தகவல் இதோ:

இந்தியாவிலிருந்து இங்கிலாந் தையும், பிரான்சையும் சொந்த நாடாக்கிக் கொண்ட திரு. ராஜாராவ் என்ற ஒரு இந்தி நாவலாசிரி யருக்கும், நேருவுக்கும் ஜெர் மனியில் 1930 இல் நடைபெற்ற ஒரு உரையாடல் பற்றி, பிரபல அமெ ரிக்க எழுத்தாளரான லூயி ஃபிஷர்  ஜான்டே கம்பெனியார், நேருவுக்கு வெளியிட்ட புகழஞ்சலி நூலுக்கு எழுதியுள்ள விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அப்பொழுது ஜவகர்லால் நேரு அவர்களது துணைவியார் உடல் நலங்குன்றி அய்ரோப்பா வில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தார்.

திரு. ராஜாராவ், நேருவிடம் இந்தியாவைப் பற்றியும், வாழ்க் கையைப் பற்றியும் பேசிக் கொண்டு வரும் பொழுது, அதில் உள்ள மகாத்மியங்களின் பெருமைகளைக் கூறினார். இது நேருவுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது.

உடனே நேரு, நீங்கள் எப்போதும் இப்படித்தான் பேசு வீர்களா? என்று வியப்புடன் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த திரு. ராஜாராவ், நீங்கள் ஏதாவது ஒன்றை நம்புகிறீர்கள் அல்லவா? எந்த ரூபத்திலாவது கடவுளை நம்பு கிறீர்கள் அல்லவா? என்றார்.

"கடவுளா? என்ன கடவுள்?" என்று நேரு மிகவும் ஆத்திரத்துடன் கேட்டுவிட்டு, "கடந்த 3000 ஆண்டு களாக அந்தக் 'கடவுள்' நம்மை எங்கே கொண்டு போய்ச் சேர்த் தது? அடிமைத்தனம், வறுமை, இது தானே இங்கு மிஞ்சியது? "என்று பளிச்சென்று பதில் சொன்னார்.

இத்தகவல் 26-2-1966 "சுய ராஜ்யா" இங்கிலீஷ் வார ஏட்டில் "நேரு பாரம்பரியம்" என்ற தலைப் பில் ஆச்சாரியார் (ராஜாஜி) அவர் களால் கையொப்பமிட்டு எழுதப் பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

நேருவை, கடவுள் எதிர்ப் பாளர், மத எதிர்ப்பாளர் என்று வலுக்கட்டாயமாகக் காட்டுவதற்கு இந்தத் தகவலை இங்கு எடுத்துக் காட்டவில்லை.

நேரு போன்றவர்களை, ஆச் சாரியார் எப்படிப் பார்க்கிறார் என்ப தற்காகத்தான் அதன் சாயத்தை நனைத்துப் பிழியத்தான் இதை இங்கு எடுத்துக் காட்டுகிறோம்.

10-4-1976 அன்று வெளிவந்த "சுயராஜ்யா" ஏட்டின் முதல் பக்கக் கடிதத்தில், தாங்கள் தீவிர சோஷ லிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்ள விரும்பும் சிலர், மத நம்பிக்கை மூடத்தனமானது என்று சொல்லுவது பழக்கமாக இருந்து வந்திருக்கிறது என்றும், இந்து மதம் லவுகீகத்தைப் போதிக்கிறது; அரசியலைப் போதிக்கிறது.

காரல்மார்க்சும், லெனினும் சொன்னதை விட தீவிரமான சோஷலிசத்தையும் போதிக்கிறது. அதனாலேதான் மத நம்பிக்கை இல்லாத தீவிரவாதிகள் இந்தியா வில் வளர முடிந்ததில்லை என்றும் முற்றும் கரைத்துக் குடித்த மேதா விலாசம் போல எழுதியுள்ளது.

நேரு தீவிரவாதியாகவே இருக் கட்டும் ராஜாஜியைவிட அதிக மாகப் போற்றப்படத்தானே செய் கிறார். நேருவின் இன்னொரு பக்கத்தைத் தெரிந்து கொள்ள இது போதுமானதுதானே!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner