எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

டில்லி,  நவ 14 நிதின்கட்கரி தலைமையில் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் விளம்பரத்தில் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள சாலைகளை இந்தியச் சாலைகள்போல காண் பித்து விளம்பரப்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் ஆயி ரக்கணக்கான கிலோமீட்டர் நீளச் சாலைகள் உள்ளன. ஆனால், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்திற்கு தனது இணையதளத்திலும் விளம்பரத்திலும் பயன்படுத்த இதில் ஒரு நிழற்படம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள் ளது. கனடா தொரந்தோ- - கார்டினர் எக்ஸ்பிரஸ் சாலை யின் நிழற்படத்தை இந்திய சாலையைப்போல் மாற்றி வெளியிட்டுள்ளது. இதே நிழற்படம் குஜராத் தேர்தலை ஒட்டி வரும் விளம்பரத்திலும் பயன்படுத்தப்படவிருக் கிறதாம்.

மேலும் தேர்தல் விளம்பரத் திற்காக அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் நார்வேயில் உள்ள சாலைகளையும் இந்தியச் சாலைகளைப் போல் சித்தரித்து ஊடகங்களில் வெளியிடத் தயாராக உள்ளது. இந்திய நெடுஞ்சாலைத்துறை இணைய தளத்தை பராமரிக்கும் இந் தியன் நேஷ்னல் போர்டல் என்னும் மத்திய அரசின் கீழ் வரும் நிறுவனம் வெளிநாட்டு நிழற்படங்களை இந்திய சாலைகளாக மாற்றி பதியவிட் டிருப்பது, பன்னாட்டளவில் இந்தியாவிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படங்கள் விரைவில் குஜராத் தேர்தல் விளம்பரங்களில் இந் திய அரசின் சாலைகளைப் பாருங்கள் என்ற பெயரில் வெளிவரவிருக்கிறதாம்.

குஜராத் தேர்தலை ஒட்டி, அங்கு வாக்குகளைப் பெறுவ தற்கு பாஜக அரசு விதிமுறை களை மீறி மக்களை ஏமாற்ற பலவழிகளில் முயன்று வரு கிறது. சில நாட்களுக்கு முன்பு பெட்ரோலியத்துறை அமைச்ச கம், இந்தியா முழுவதும் இலவச எரிவாயுத் திட்டம் என்ற ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அது மோசடியான புள்ளிவிவரம் என்று தெரிந்த உடன் அந்த அமைச்சகம், பிழையுடன் வந்து விட்டது என்று டுவிட்டரில் மட்டும் ஒரு வரிச் செய்தியாக வெளியிட்டது. அது ஊட கங்களுக்குப் போய்ச் சேர வில்லை அல்லது ஊடகங்கள் உண்மையை மறைத்து விட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner