எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலையின்றித் தவிப்போர் 80 லட்சம் பேர்

சென்னை, நவ.14 தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், 57 வயதுக்கு மேலான, 5,685 பேர் உட்பட, 79.69 லட்சம் பேர், அரசு வேலைக் காக பதிவு செய்துள்ளனர்.

இந்தாண்டு, அக்., 31 வரையிலான, பதிவு விபரங்களை அரசு, வெளியிட்டுள்ளது. இவர் களில், 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், 22.35 லட்சம்; கல்லூரி மாணவர்கள், 30.60 லட்சம் பேரும் உள்ளனர். 35 முதல், 56 வயதிற்கு உட் பட்டோர், 11.57 லட்சம்; 57 வய திற்கு மேற்பட்ட, 5,685 பேரும் உள்ளனர். கலைப் பிரிவில், இளங்கலை பட்டம் பெற்றவர் கள், 4.56 லட்சம்; அறிவியலில் பட்டம் பெற்றவர்கள், 6.06 லட்சம்; வணிகவியலில் பட்டம் பெற்றவர்கள், 3.27 லட்சம்; இளங்கலை பட்டதாரி ஆசிரி யர்கள், 3.90 லட்சம்; பொறியியல் பட்டம் பெற்றவர்கள், 2.44 லட்சம் பேரும் பதிவு செய்துள்ளனர். மருத்துவம் படித்தோர், 3,680 பேர்; முதுகலை பட்டதாரிகள், 798; வேளாண்மை இளங்கலை பட்டதாரிகள், 5,683; முதுகலை பட்டதாரிகள், 595; இளங்கலை சட்டம் படித்த வர்கள், 1,287; முதுகலை சட்டம் படித்தவர்கள், 219; இளங்கலை கால்நடை மருத்துவம் படித் தோர், 1,287; முதுகலை முடித் தோர், 181 பேர், வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.


தாமரை தேசிய மலர் அல்ல!

இந்திய தாவரவியல் ஆய்வு மய்யம் தகவல்

 

டில்லி, நவ.14 உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த அய்ஸ்வர்யா பராஷர் என்பவர், தாமரை தேசிய மலராக அறிவிக்கப்பட்டுள் ளதா? என்று கேள்வி எழுப்பி,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்  இந்திய தாவர வியல் ஆய்வு மய்யத்தில் விண்ணப்பித்திருந்தார். நாடு முழுவதும் இந்தியாவின் தேசியமலர் தாமரை  என்று நம்பப்பட்டு வந்தது. பள்ளிப் புத்தகங்களிலும் தாமரையே தேசிய மலர் என்றே குறிப் பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய தாவரவியல் ஆய்வு மய்யம் அளித்துள்ள பதிலில் தாமரை தேசிய மலர் அல்ல என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா வுக்கு தேசிய மலர் என்று ஒன்றே இல்லை என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் விடுதலைக்குப் பின்னர், இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்று கருதப் பட்டு வரும் நிலையில், தாமரை மலர் இந்தியாவின் தேசிய மலரே அல்ல. ஆகவே, இந்திய அரசு தகவல் தொடர்பு ஊடகங்களில் தாமரை குறித்த தவறான தகவல்களை அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிட் டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner