எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பைதிரையுலகின் இயக்குநர் சஞ்சய்லீலா பன் சாலி இயக்கத்தில் உருவாக் கப்பட்ட ஒரு திரைப்படம் பத்மாவதி. வரும் டிசம்பர் முதல் தேதி வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் ராஜஸ்தான் இராணி பத்மாவதி கதாப் பாத்திரத்தை பிரபல திரைப்பட நடிகை தீபிகாபடு கோனே ஏற்றிருக்கிறார். நடி கர்கள் ஷாகித் கபூர், தன்வீர்சிங் உள்ளிட்டோர் நடித் துள்ளனர்.

இந்தத் திரைப்படம் பற்றி செய்தி வந்த முதற் கொண்டே இந்துத்துவா அடிப்படைவாதி கள் கடும் எதிர்ப்பை வெளிப் படுத்தி வருகின்றனர். கார்னி சேனா ராஜ்புத் வகுப்பினர், பச்சைப்பார்ப்பன அமைப் பான சர்வ பிராமின் மகாசபா, ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் திவ்யாகுமாரி உள் ளிட்டோர் இந்த எதிர்ப்புப் பட் டியலின் ஈட்டி முனைகள்!

என்ன காரணமாம்? அலா வுதீன் கில்ஜி - ராஜஸ்தான் இராணி பத்மாவதி ஆகியோரி டையே காதல் மலர்ந்ததாக அத்திரைப்படத்தில் காட்சி வெளியாகியுள்ளது என்பது எதிர்ப்பாளர்கள் கூறும் கார ணமாகும்.

கோல்காப்பூரில் திரைப் படம் எடுக்கப்பட்டபொழுது இந்தப் பாசிசக் கும்பல் அத னைச் சூறையாடித் தீர்த்தது.

இந்து மதத்தைச் சேர்ந்த இராணி பத்மாவதி - முஸ்லீம் மதத்தைச் சார்ந்த அலாவுதீன் கில்ஜியைக் காதலிப்பதா? அத னை ஏற்க முடியவே முடியாது என்று முஷ்டியைத் தூக்குகின் றன. வழக்கமான முஸ்லிம் எதிர்ப்புப் பாணியில்.

ஆனால் திரைப்படக் குழு வினர் இராணி  பத்மாவதி - அலாவுதீன் காதல் காட்சிகள் ஏதுமில்லை என்று திட்டவட்ட மாக அறிவித்த பிறகும் இந்தக் கா(லி)விக் கூட்டம் கடப் பாறை யைத் தூக்கிக் கொண்டு திமிர்ப் பிடித்து அலைகிறது.

அப்படியே இருக்கட்டும்; காதல் மதத்தைத் தாண்டி வரக் கூடாதா? என்னே பிற்போக்குத் தனம்!

2006ஆம் ஆண்டில் தீபக் மேத்தா என்ற அம்மையார் ‘ஃபயர்’ ‘எர்த்’ ‘வாட்டர்’ என்ற திரைப்படங்களை எடுத்தார்.

‘வாட்டர்’ என்ற திரைப் படம் விதவைப் பெண்களைப் பற்றியது! காசி கங்கைக் கரை யில் படம் எடுத்தபோது இந் துத்துவவாதிகள் படப் பிடிப் பைச் சூறையாடி பெரும் நட் டத்தை ஏற்படுத்தினர். விதவை கள் விபச்சாரிகளாக சித்தரிக் கப்படுகின்றனர் - இது இந்து மதத்துக்கு அவமானம் என்று கூறினர். தீபக்மேத்தா  அது உண்மையல்ல என்று மறுத் தும்கூட அந்தக் கூட்டம் அதனை ஏற்கவில்லை.

பிறகு கங்கைக் கரையிலி ருந்து கொல்கத்தாவுக்குப் படப் பிடிப்பு மாற்றப்பட்டது. அப் பொழுது உமாபாரதி என்னும் காவி சந்நியாசி என்ன கூறி னார்? எங்கு சென்றாலும் கல்லால் அடிப்போம் என்றாரே!  கடைசியாக இலங்கைக்குச் சென்று வெற்றிகரமாக எடுக்கப் பட்ட அந்தப் படம் ஹாங்காங் பன்னாட்டுத் திரைப்பட விழா வில் (24.2.2006) சிறந்த திரைப் படமாகத் தேர்வு செய்யப் பட்டு விருது வழங்கப்பட்டது. இந் துத்துவாவாதிகள் முகத்தில் கரி பூசப்பட்டது.

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner