எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெலகாவி, நவ.15 கருநாடக மாநில சட்டமன்றத்தில் நேற்று (14.11.2017) மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம்-2017என்று அறியப்பட்ட புதிய சட்டத்துக் கான சட்ட வரைவை கருநாடக மாநில சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தாக்கல் செய்தார்.

கருநாடகா மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்-2017 சட்ட வரைவைசட்டமன்றத்தில்முன் வைப்பதற்குகருநாடகஅமைச் சரவைக்கூட்டத்தில்27.9.2017 அன்று ஒப்புதல் அளிக்கப்பட் டது. அதன் தொடர்ச்சியாகவே, நேற்றுசட்டமன்றத்தில்கரு நாடகசட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா மூடநம் பிக்கை ஒழிப்புச்சட்ட வரைவை தாக்கல் செய்தார்.

பக்தி மற்றும்மதத்தின்  பெய ரால் கடைப்பிடிக்கப்படுகின்ற, மனிதத்தன்மையற்றமோசமான பழக்கங்கள் மற்றும் மந்திரவித் தைகள் உள்ளிட்ட மூட நம் பிக்கைகள்ஒழிப்புக்கானநட வடிக்கையைத் தீவிரப்படுத்துவ தற்காக புதிய சட்டம் அறி முகப்படுத்தப்படுகிறது.

துணை கண்காணிப்பாளர் எம்.கே.கணபதி தற்கொலை வழக்கில், பெங்களூரு வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ்மீது மத்திய புலனாய்வுக்குழுவினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததையடுத்து அவர் பதவியிலிருந்து விலகக் கோரி பாஜகவினர் சட்டமன்றத்தில் தர்ணா போராட்டத்தை நடத்தினார்கள்.

Ôமடே ஸ்னானாÕ உள்ளிட்ட 16 வித மூடநம்பிக்கை ஒழிப்புக்கான சட்டம்

பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சிலைமீது உருளும் மூடத்தனமான Ôமடே ஸ்னானாÕ உள்ளிட்ட மூட நம்பிக்கைகளுக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதற்குரிய சட்டமாக நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனிதத் தன்மையில்லாமல், பழக்க, வழக்கத்தின் பெயரால் மக்களிடையே ஊறிப்போயுள்ள  தீய பழக்க வழக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து முற்றிலும் அப்பழக்கங்களைக் களைவதே புதிய சட்டத்தின் நோக்கமாக இருக்கும். மடே ஸ்னானா உள்ளிட்ட 16 மூடத்தனங்கள் பட்டியலிடப்பட்டு அவற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்கான சட்டத்துக்கான வரைவாக இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சோதிடம் மற்றும் வாஸ்து உள்ளிட்டவை இப்பட்டியலில் இடம்பெறவில்லை.

கருநாடக முதல்வர் சித்தராமையாவின் இம்முயற்சிக்கு, இந்துக்களுக்கு எதிரான சட்டம் என்று குறிப்பிட்டு பாஜக, இந்துத்துவா அமைப்புகளின் கடும் எதிர்ப்பும் இருந்தபோதிலும், பகுத்தறிவாளர்கள், மூடநம்பிக்கைகளுக்கு தடைகோரும் செயற்பாட்டாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner