எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, நவ.15 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி கருப்புப்பணத்துக்கு எதிராக எந்த ஒரு குற்றப்பத்திரிகையும் மோடி அரசால் பதியப்படவில்லை என தெரிய வருகிறது.

மல்டி ஏஜென்சி

குரூப்

மல்டி ஏஜென்சி குரூப் என்னும் அரசுத் துறை நிறுவனம் கருப்புப் பணம், வருமானத்தை மறைத்தல் ஆகியவைகளை கவனித்து வருகிறது.  அதற்கு தற்போதைய மத்திய நிதியமைச்சர் தலைமை தாங்கி வருகிறார். பனாமா  பேப்பர்ஸ் தகவல் வெளிவந்தபின் கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட இந்த நிறுவனம் முக்கியமாக வரி ஏய்ப்பு, அன்னிய முதலீடு, கருப்புப் பணம் ஆகியவற்றைக் கண்காணிக்க மோடி தலைமையிலான மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டதாகும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இதுவரை இந்த மல்டி ஏஜன்சி குரூப் பதிவு செய்த கருப்புப் பணத்துக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளின் எண்ணிக்கை எவ்வளவு எனக் கேட்டு ஒரு மனு அளிக்கப்பட்டிருந்தது.  அதற்கு அளித்த பதிலில், பனாமா பேப்பர்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளை கண்காணித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் பணியை இந்த நிறுவனம் இதுவரை செய்து வருகின்றது.    இந்த நிறுவனம் அறிக்கைககளை அரசுக்கு அளிக்கும்.  ஆனால் குற்றப்பத்திரிகை பதிவு செய்யும் அதிகாரம் இதற்கு இல்லை. இந்த நிறுவனம் அளித்த தகவலில் உள்ள கருப்புப் பண குற்றவாளிகளின் மீது இதுவரை ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner