உடுப்பி நவ.15 கருநாடக மாநி லத்தில் ஜோதிடரின் பேச்சைக் கேட்டு, 11 வயது சிறுவனை கடத்தி கொல்ல முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைப்பிள்ளையைக் காளிக் குப் பலி கொடுத்தால், செல்வம் பெருகும் என ஜோதிடர் ஒருவர் கூறியதை நம்பி, கேரளாவில் இருந்து 11 வயது சிறுவனை கடத்தி பலி கொடுக்க முயன்ற கும்பலை கருநாடக மாநில காவல்துறையினர் கைது செய்த னர்.
கேரளா-கருநாடகா எல் லையில் உள்ள நரலே என்ற பகுதியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் சிறுவனின் அழுகுரல் கேட்டு அப் பகுதியில் உள்ளவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் வந்து அந்தப் பண்ணை வீட்டை சோதனை செய்தபோது அங்கு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனை மீட்டனர். மேலும் அங்கிருந்த 7 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் விசா ரணை நடத்தியபோது தலைப்பிள்ளையை பலி கொடுத்து பூஜைகள் செய்தால் செல்வம் பெருகும் என்று ஜோதிடர் ஒருவர் கூறிய கார ணத்தால் கேரளாவில் உள்ள கண்ணூர் பகுதியில், தனியாக நின்று கொண்டிருந்த சிறுவனை காரில் கடத்தி வந்தோம். ஜோதிடர் கூறியபடி நல்ல நாள் பார்த்து இச்சிறுவனை யாகக் குழியில் தள்ளி பலி கொடுக்கவிருந்தோம் என்று கூறினார்கள்.
இதனையடுத்து 7 பேரையும் கொலை வழக்கு, மனிதக் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்த கருநாடக மாநில காவல்துறையினர் ஜோதிடரையும் தேடி வருகின் றனர். ஜோதிடரின் பேச்சைக் கேட்டு, 11 வயது சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற சம் பவம் கருநாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.