எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு: சரத்பவார்

விதர்பா, நவ.16 குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசு கட் சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தாக தேசியவாத காங்கிரசு தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதி யில் நான்கு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விவசாயிகளை சந்தித்து வரும் அவர் குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டு மக்களுக்கு வெறும் கனவுகளை மட்டுமே மோடி காட்டி வருகிறார். புல்லட் ரயில் திட்டத்தை அவரால் நிறை வேற்ற முடியாது. இதுவரை குஜராத்தில் வர்த்தகர்களின் ஆதரவு பாஜகவுக்கு இருந்து வந்தது. இப்போது, ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி மூலம் குஜராத்தில் வர்த்தகர்களின் ஆதரவை பாஜக இழந்துவிட்டது. பாஜக மீது அவர்களுக்கு உள்ள கோபம் சட்டப் பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.

குஜராத்தில் இப்போது காங்கிரசுக்கு ஆதரவான சூழ்நிலை உள்ளது. எனவே, அங்கு காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.


சிவசேனாவை விட்டு விலக

ரூ.5 கோடி தருவதாக பா.ஜ.க. அமைச்சர் பேரம்

எம்.எல்.ஏ. ஹர்ஷவர்தன் ஜாதவ் புகார்

மும்பை, நவ.16 சிவசேனாவை விட்டு விலக 5 கோடி ரூபாய் தருவதாக பா.ஜ.க. அமைச்சர் என்னிடம் பேரம் பேசினார் என எம்.எல்.ஏ. ஹர்ஷ வர்தன் ஜாதவ் புகார் தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் கன்னாட் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஹர்ஷவர்தன் ஜாதவ். இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் பா.ஜ.க. அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலை கடந்த மாதம் அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது கட்சியை விட்டு விலகி வந்தால் 5 கோடி ரூபாய் தருவதாக அவர் வாக் குறுதி அளித்தார். உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படும். இதேபோல் மற்ற சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கும் 5 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

கட்சியை விட்டு விலக பா.ஜ.க. அமைச்சர் 5 கோடி ரூபாய் தருவதாக சிவசேனா எம்.எல்.ஏ. கூறிய குற்றச்ச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூஜைக்கு அழைத்து மைனர் பெண் பாலியல் வன்கொடுமை - மந்திரவாதி மீது வழக்குப்பதிவு

மும்பை, நவ.16 மும்பை பவாயில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நாகேஷ் பண்டாரி. மந்திரவாதி. இவர் கட்டிடத்தின் அருகே உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் 17 வயது பெண்ணை தனது வீட்டில் நடக்கும் பூசையில் கலந்து கொள்ளும்படி அடிக்கடி அழைத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், மைனர் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த அவளது தாய் சம்பவத்தன்று மந்திரவாதியின் வீட்டிற்கு சென்ற தனது மகளை ரகசியமாக பின் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது மந்திரவாதி, அந்த மைனர் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படு கிறது. இதை பார்த்து மைனர் பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்தார். மந்திரவாதியை பிடித்து சத்தம் போட்ட அந்த பெண் தனது மகளை அவரிடம் இருந்து மீட்டு விவரத்தை கேட்டார்.

அப்போது பூஜைக்கு வரும்படி அழைத்து தன்னை பலமுறை நாகேஷ் பாண்டே பாலியல் வன்கொடுமை செய்ததாக மைனர் பெண் கூறினார். இதையடுத்து அந்த பெண் தனது மகளை பவாய் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அந்த மந்திர வாதிமீது புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலர்கள் நாகேஷ் பண்டாரி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி வருவதாக பவாய் காவலர்கள் தெரிவித்தனர்.

கேரளாவில் அரசு மருத்துவர்களின்

ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு

திருவனந்தபுரம்,  நவ.16  கேரளாவில் முதல் அமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக மாநில அரசின் மருத்துவப்பணிகள் இயக்குந ரகத்தின் கீழ் பணி செய்யும் மருத்துவர்களின் ஓய்வு வயதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மாநில அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 56இல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுகிறது. மாநில மருத்துவத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல் அமைச்சர் பினராயி விஜயன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner