எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெலகாவி, நவ.17 கருநாடக மாநில காங்கிரசு அரசு கொண்டு வந்த மூடநம் பிக்கை ஒழிப்புச் சட்டம் எதிர்ப்பின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருநாடக மாநிலத்துக்கான தனிச்சட்ட மாக `மனிதத்தன்மையற்ற தீய பழக்கங்கள், மந்திர வித்தைகள் ஒழிப்பு மற்றும் தடுப் புச்சட்டம் 2017' ஒரு சில மாற்றங்களுடன் அம்மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி களின் எதிர்ப்புகள் இல்லாமல் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாத்வா பார்ப்பன வகுப்பினர் பின் பற்றிவரும் `முத்திரை' பதிக்கும் மூட நம்பிக்கை நிகழ்வு தடை செய்யப்பட வில்லை. பித்தளை அல்லது தங்கத்தால் கைகளில் சூடு போடுகின்ற பழக்கமாக `முத்ரா' உள்ளது. ஆனால், முத்திரை போட்டுக்கொள்வதன்மூலமாக நோய்கள் நீங்கும் அற்புதம் போன்ற விளம்பரங்கள் தடை செய்யப்படுகின்றன.

கருநாடக மாநில சமூக நீதித்துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா கூறுகையில், மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம்குறித்து அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளை யும் கேட்கப்பட்டது. அதன்படியே சட்டம் இயற்றப்பட்டது. எதிர்க்கட்சியினர் அனை வரும் இச்சட்டவரைவை வரவேற்றார்கள். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களி டையே சட்டம் குறித்து தீவிரமாக விழிப் புணர்வை உருவாக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட் டர் மற்றும் பிற பாஜக சட்டமன்ற உறுப் பினர்கள் சி.டி.ரவி, எஸ்.சுரேஷ்குமார், கோவிந்த் கர்ஜோல் ஆகியோரும், மதசார் பற்ற ஜனதா தள கட்சி சட்டமன்ற உறுப் பினர்கள் ஒய்.எஸ்.வி.தத்தா, எச்.டி.குமார சாமி, எச்.டி.ரேவண்ணா ஆகியோரும் சட்ட வரைவுகுறித்து  சட்டமன்றத்தில் பேசுகை யில் தங்களின் கருத்துகளை முன்வைத் தார்கள்.

சோதிடம், வாஸ்து ஆகியவற்றையும் தடை செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.பாடீல் கோரினார்.

அரசு அலுவலகங்களில் பூஜைகளை செய்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று குமாரசாமி பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஜட்டர் பேசுகை யில், சட்டம் முறைகேடாக பயன்படுத்தப் படக் கூடாது என்றும், பொதுமக்களிடையே மூடநம்பிக்கைகளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டி யது மிகவும் அவசியமாகும் என்றார்.

ரேவண்ணா பேசுகையில், எதிர்வரும் தேர்தலையொட்டி, இச்சட்டவரைவை 2018ஆம் ஆண்டுக்கு ஒத்திவைத்தால் காங் கிரசுக்கு தீமைகளைவிட நன்மை விளையும் என்றார்.

கருநாடக முதல்வர் சித்தராமையா பேசுகையில், இச்சட்டத்தால் கட்சிக்கு வெற்றியே கிடைக்கும் என்றார்.

முதல்வர் சித்தராமையா தம்மை ஒரு பகுத்தறிவாளர் என்றே குறிப்பிடுகிறார். சில மாதங்களுக்கு முன்பாக சித்தராமையா காரின்மேல் காகம் அமர்ந்தது என்பதையே கெட்ட வாய்ப்பு ஏற்படும் எனும் மூட நம்பிக்கை சமூக ஊடகங்களில் பரப்பப் பட்டது. ஆனால், மூட நம்பிக்கைகளை முறியடித்து, ஒழிக்கின்ற சட்டம் எவ்வித எதிர்ப்புகளுமின்றி நிறைவேற்றப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner