எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தற்போது தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள நிரந்தர ஆளுநர் மேதகு பன்வாரிலால் புரோகித் அவர்கள், "அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சி"யை  அனுதினமும்  நடத்திட திட்டங்களைத் தீட்டி, ஒத்திகையை கோவையிலிருந்து துவக்கியுள்ளதோடு, சென்னை தலைமைச் செயலகத்திற்கும் வந்து ஆய்வும் ஆட்சியும் செய்து, டில்லிக்கு அவ்வப்போது தகவல் அனுப்பிட ஏற்பாடுகள் - டில்லியில் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடைபெறத் துவங்கி விட்டன,

இதன் அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டிலிருந்து மத்திய ஆட்சிக்குச் சென்ற பார்ப்பன அய்.ஏ.எஸ். மூத்த அதிகாரியான பார்ப்பனர் ஒருவரை (ராஜகோபால் என்பவரை) ஆளுநரின்  செயலாளராக நியமித்து, மத்திய அரசில் அவர் பூர்த்தி செய்ய வேண்டிய காலத்திற்கு முன்பாகவே திருப்பி அழைப்பதன் மூலம், மத்திய அரசில்  அவரின் பதவி  காலத்தை  தள்ளுபடி (கீணீவீஸ்மீ) செய்து   ஒரு புது நடைமுறையை உருவாக்கியுள்ளது.

அவரை தமிழக ஆளுநரின் செயலாளராக நியமித்து "ராஜ்ய பரிபாலனத்தை"க் கண்காணிக்க முழு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுவதுடன், ஆளுநர் - அவரது செயலாளர் எல்லாம் சர்வம் 'புரோகித' மயம் என்பதால் பா.ஜ.க. ஆட்சி என்ற பார்ப்பன ஆட்சிக்கு அஸ்திவாரம் பலமாகப் போடப்படுகிறது என்று உத்தியோக வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன  - இது உண்மையா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner