எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, நவ.18 தமிழக மூதறிஞர் குழுவின் கூட்டம் சென்னை பெரியார் திட லில் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (17.11.2017) மாலை நடைபெற்றது.

தமிழர் தலைவர் உரை

மருத்துவர் ஜெயசிறீ கெஜராஜ் அவர்களை தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வரவேற்று பாராட்டிப் பேசினார்.

மருத்துவர் ஜெயசிறீ கெஜராஜ் அவர்களின் தந்தையார் கெஜராஜ் அரசு பொது மருத்துவ மனையில் திறமையான ரேடியாலஜிஸ்ட் டாக பணியாற்றியவர்.  அப்போதெல்லாம் சிறப்பான மருத்துவ சேவைக்கு அரசு பொது மருத்துவமனைதான். இப்போது உள்ளதைப் போல் தனியார் மருத்துவமனைகள் கிடை யாது. அரசு பொது மருத்துவமனையில் அவருக்குரிய வாய்ப்பு மறுக்கப்படும் நிலை யில் விடுதலையில் இது உண்மையா? என்று வெளியான செய்தி அப்போதைய முதல்வர் கலைஞரின் கவனத்துக்கு சென்று, அதன் பின்னர் அவருக்குரிய வாய்ப்பு கிடைத்தது. விடுதலையில் அத்தகவல் வெளியானாலும், கெஜராஜிடம் நேரிடையான அறிமுகம் கிடையாது. மருத்துவர் ஜெயசிறீ கெஜராஜ் அன்னை மணிம்மையாரின் உறவினர் என்பதைவிட தொண்டறம்தான் உறவு என்றும், மருத்துவர் கெஜராஜ் வருமானம் பாராமல் மருத்துவத்தை தொண்டறமாக செய்து வருகிறார். வருமானம், வருமானம் என்று பொருளை தேடியவர்கள்   அதிகமான வருமானத்தால் மானத்தையே இழக்கிறார்கள். அப்படி இல்லாமல், வருமானம் கருதாமல் தொண்டறத்தையே வெகுமானமாக கருதி, மருத்துவத் தொண்டறம் புரிந்து வரும் மருத்துவர் ஜெயசிறீ கெஜராஜை வரவேற் பதில், பாராட்டுவதில் வாழ்த்துவதில் பெருமையடைகிறோம். அவர் தொடர்ந்து தொண்டறப்பணிகளை செய்திட வேண்டும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்.

கூட்டத்துக்கு நீதியரசர் ஏ.கே.ராஜன்   தலைமை வகித்தார். தலைமையுரையில், திராவிட இயக்கங்கள் அனைத்துமே மக்கள் நலனுக்கான இயக்கம் என்றும், இயக்கத்துக்கு அப்பாற்பட்டவர்களும் இயக்கத்தால் பயன் பெற்றுள்ளார்கள். அதிலும் விடுதலை நாளி தழின் பணி மகத்தானது. திராவிட இயக்கம் மக்கள் இயக்கம் என்று ஆதாரங்களுடன் எடுத்துக்கூறினார்.

ஆடிட்டர் அர. இராமச்சந்திரன் அனை வரையும் வரவேற்று சிறப்பு விருந்தினர் மருத்துவர் ஏ. ஜெயசிறீ கெஜ ராஜ் குறித்து அறிமுக உரை யாற்றினார்.

மருத்துவர் ஏ. ஜெயசிறீ கெஜராஜ் உரை

பெண்கள் பாங்குடன் முதுமை அடைவது - ஆண்கள் பங்கு (கீஷீனீமீஸீ கிரீமீவீஸீரீ நிக்ஷீணீநீமீயீuறீறீஹ்-ஸிஷீறீமீ ஷீயீ விமீஸீ)  எனும் தலைப் பில் மகப்பேறு மருத்துவர்  டாக்டர் ஏ.ஜெயசிறீ கெஜராஜ் உரையாற்றினார்.

மருத்துவர் ஏ.ஜெயசிறீ கெஜராஜ் தமதுரையில் பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மூல மாக விளக்கங்களை அளித்தார். கூட்ட முடிவில் பார்வையாளர் களின் கேள்விகளுக்கு விளக்க மாக பதில்களை அளித்தபோது, குடும்ப நல ஆலோசகராகவே மாறி அனைவரின் நெஞ்சையும் கொள்ளை கொண்டார்.

மருத்துவ ரீதியில் வாழ் வியலை இணையர்கள் அணுக வேண்டிய முறைகள்குறித்தும், முதுமையில் இணையர்கள் ஒத் துழைப்பு, வயதானவர்களிடம் பிள்ளைகள், மருமகள்கள், மரு மகன்கள் ஆகியோரின் அணுகு முறைகள், பெண்களின் மாத விலக்கு காலம், பெண்களின் மாத விலக்கு நிற்கின்ற காலங் களில் அவர்களுக்கு உற்ற துணையாக வீட்டில் உள்ள வர்கள் இருக்கவேண்டும். வாழ்வில் அனைத்தும் முடிந்து விட்டதாக விரக்தி ஏற்படாமல், அனைவரும் அவர்களுக்கு உறுதுணையாக விளங்க வேண்டும் என்றும் விளக்கமாக எடுத்துக்கூறினார். 20 முதல் 30 வயதுள்ள இளம் பெண்களுக்கு எலும்பு உறுதிப்படுத்துவதற் கான காலமாக இருக்கிறது. வயதால் உடலால் முதுமை அடையும்போது, மாதவிலக்கு நிற்கும்போது, ஈஸ்ட்ரோஜன் பற்றாக்குறையால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் மருத்துவத்தால் சீராக்கலாம் என்பதையும், பெண்களிடையே மருத்துவ விழிப்புணர்வு தேவைப் படுவதுபோல், ஆண்களுக்கும் பெண்கள் நோய்கள்குறித்த விழிப்புணர்வு அவசியம் என்பதையும், முதுமையில் எலும்புகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

கூட்ட முடிவில் கிருஷ் ணமூர்த்தி நன்றி கூறினார்.

மருத்துவர்கள் மீனாம்பாள், கலைச்செல்வி, நிவேதிதா பாரதி, சுசீலா, காந்திமதி, மோகன்ராஸ், திருவேங்கடம், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், பொறியாளர் இன்பக்கனி, சி.வெற்றிசெல்வி மற்றும் மருத் துவர்கள், அறிஞர் பெருமக்கள் ஏராளமானவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner