எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பகுத்தறிவுப் பாதையின் மைல்கள்

அய்யாவின்

அடிச்சுவட்டில்...

(பாகம்-5)

கி. வீரமணி

விலை ரூ.250

திராவிடர் கழக வெளியீடு

சென்னை - 600 007

044-26618161

தந்தை பெரியாரின் இயக்கத்தில் சிறுவயதிலேயே தன்னை இணைத்துக்கொண்ட கி.வீரமணி, 'அய்யாவின் அடிச் சுவட்டில்...'  எனும் தலைப்பில் எழுதிய தன்வரலாற்றுத் தொடர் எனும் வரிசையில் 5-ம் பாகமே இந்நூல்.

'இயக்க வரலாறு தன்வரலாறான கதை' என்று நூலாசிரியரே குறிப்பிடுவதைப் போல, இந்நூல் எங்கும் தனிமனித வரலாறு என்பதைவிட, திராவிடர் கழகத்தின் வரலாற்றுச் சுவடுகளே கால வரிசையில் பதிவாகியுள்ளன. 1978-ல் திராவிடர் கழகத்தின் பொறுப்பை ஏற்று கி.வீரமணி பங்கேற்ற சூளுரை நாள் பொதுக்கூட்டங்களிலிருந்து தொடங்கும் இந்த பாகம், 1980-ல் 'பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இதுவரை 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்படும். மேலும், வருமான வரம்பாணை உடனடி யாக ரத்துசெய்யப்படுகிறது' என்கிற அன்றைய தமிழக அரசின் அறிவிப்போடு நிறைவடைகிறது. திராவிடர் கழகம் தொடர்ந்து முன்னெடுத்த சமூக நீதிக்கான போராட்டங்களையும், இடையிடையே அதற்கு ஆதாரமான புகைப்படங்களையும் இணைத்திருப்பது பதிப்புக்குச் செழுமை சேர்ப்பதாக உள்ளது.

- மு.முருகேஷ்

நன்றி: 'தி இந்து' 18.11.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner