எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இந்த வாரம் - பகுதியில்...

சென்னை பத்திரிகையாளர் கூட்டமைப்பின் (எம்யூஜே) பொதுச் செயலாளராக இருந்த நண்பர் இரா. மோகன் திடீரென்று மாரடைப்பால் தனது 54ஆவது வயதில் மரணமடைந்தது ஒட்டுமொத்த பத்திரிகையாளர் சமுதாயத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது நினை வேந்தல் கூட்டம் நேற்று சென்னை லயோலா கல்லூரியில் பெர்ட்ரம் அரங்கத் தில் நடைபெற்றது.

உடல் நலமில்லாமல் இருந்த துக்ளக் ஆசிரியர் சோ சாரை சந்தித்தது எனக்கு நினை வுக்கு வந்தது. என்னிடம் அவர் சொன் னார்: "நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் நாம் கவனிக் கிறோம். ஆனால், நம்முடனேயே இருக் கும் நமது உடம்பை நாம் கவனிப்பதுமில்லை, அதுகுறித் துக் கவலைப்படுவதுமில்லை. உடம்புக்கு ஏதா வது வரும்போதுதான், 'அடடா, இதைக் கவனிக் காமல் விட்டுவிட்டோமே' என்கிற நினைப்பே வருகிறது. நான் செய்த தவறை நீங்கள் செய்து விடக்கூடாது. உடம்பைப் பார்த்துக் கொள் ளுங்கள்.'' அவர் எனக்குத் தந்த அறிவுரை எல்லாப் பத்திரிகையாளர்களுக்கும் தந்த அறிவுரையாக நான் கருதுகிறேன்.

அந்த இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட 'விடுதலை' ஆசிரியர் அய்யா கி.வீரமணி பேசும் போதும் இதையேதான் வலியுறுத்தினார். பத்திரிகையாளராகவும், சமூகப் போராளியாகவும் நிறைந்த அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகை யாளரான 'விடுதலை' ஆசிரியரின் உரை நெகிழ வைத்தது.

பத்திரிகையாளர்கள் உடனடியாகக் கேட்டுப் பெற வேண்டியவை எல்லாப் பத்திரிகை அலுவலகங்களிலும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய உடற்பயிற்சி மய்யங்கள் அமைப்பதும், அனைவருக்கும் மருத்துவக் காப் பீட்டை உறுதிப்படுத்துவதும்தான்.

சிம்பதி (Sympathy)) என்கிற ஆங்கில வார்த்தைக்கு இரக்கம் என்று பொருள் தெரியும். எம்பதி Empathy) என்பதைத் தமிழில் எப்படிக் கூறுவது என்று நீண்ட நாள்களாகவே நான் குழம்பிக் கொண்டிருந்தேன். 'விடுதலை' ஆசிரியர் 'ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்' என்கிற 'ஒப்புரவு அறிதல்' அதிகாரத்திலுள்ள திருக்குறளை மேற்கோள் காட்டிக் கூறியபோது, எம்பதி என்பதற்குச் சரியான தமிழ் வார்த்தை 'உய்த்தறிவு' அல்லது 'ஒத்தறிவு' என்று உணர்ந்தேன்.

எல்லோரும் இரா. மோகனைப் போராளி, கோபக்காரர் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், எனக்கு என்னவோ அவரது சிரித்த முகம்தான் மனதில் பதிந்திருக்கிறது!

நன்றி: 'தினமணி' 19.11.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner