எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, நவ.19 ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், பிரபல  தொழிலதிபரின் நலனுக் காக பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

இது குறித்து  பதிலளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ்  துணைத் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் நேற்று பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் தனது டிவிட்டில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பாரிசில் பிரதமர் மோடி அறிவிக்கும் முன்பாக, அமைச் சரவை குழுவின் அனுமதியை  பெற்றிருந்தாரா? உங்களை உங்கள் பாஸ் (பிரதமர் மோடி) அமைதியாக்கியது தான் வெட்கக் கேடானது. ஒப்பந்தத்தின்படி, ஒரு ரபேல் விமானத்தின்  இறுதி விலையை வெளிப்படையாக கூற முடியுமா? பொதுத்துறை நிறுவனம் எச்ஏஎல்.லை புறக் கணித்துவிட்டு, எந்த முன் அனுபவமும் இல்லாத  பிரபல தொழிலதிபர் நிறுவனத்திற்கு விமான பாகங்களை இணைக்கும் ஒப்பந்தத்தை பிரதமர் கொடுத்தது ஏன்? என 3 கேள்விகளை கேட் டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner