எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொச்சி, நவ.19 பண மதிப் பிழப்பு நடவடிக்கையால், கருப்புப் பண பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று முன்னாள் பிரதமரும், காங் கிரஸ் கட்சியின் மூத்த தலை வருமான மன்மோகன் சிங் திட் டவட்டமாகத் தெரிவித்தார்.

கேரள மாநிலம், எர்ணா குளத்திலுள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாட லில் இதுகுறித்து அவர் பேசிய தாவது: பணமதிப்பிழப்பின் மூலம் கருப்புப் பண பிரச் சினைக்கு தீர்வு காண முடி யாது. கருப்புப் பண பிரச் சினைக்கு எதிரான சரியான நடவடிக்கையும் அதுவல்ல. இதற்குப் பதிலாக, நமது வரி விதிப்பு முறை, பத்திரப்பதிவு, நிர்வாக அமைப்புகளை எளி மைப்படுத்த வேண்டும்.

இதுவொன்றுதான், கருப் புப் பண புழக்கத்தின் ஆதிக்கம் அதிகம் இல்லாமல் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்குரிய நட வடிக்கையாகும். பணமதிப் பிழப்பு முடிவானது, நாட்டில் உள்ள விவசாயிகள், சிறு நிறு வன அதிபர்களுக்கு மிகப் பெரிய துயரத்தை அளித்தது. உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட தால், தங்களது ரூபாயை மாற் றுவதற்கும், தங் களுக்குத் தேவையான பணத்தை எடுப்ப தற்கும் வங்கிகள் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. அப்போது வரிசை யில் காத்திருந்த அப்பாவி மக்கள் ஏராளமானோர் உயிரிழந் தனர். நாட்டின் பொருளாதாரம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அது சந்தேகம்தான் என்பது எனது கருத்தாகும். அடுத்த ஓராண்டுக்கு நமது நாட்டின் பொருளாதார நிலை உற்சாகம் குறைந்த நிலையில் இருக்கும் என்றே நினைக் கிறேன். அதுவரை, பணமதிப் பிழப்பு முடிவின் தாக்கம் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இருக்கும் என்று மன்மோகன் சிங் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner