எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

பேரையூர், நவ.20 சதுரகிரி மகாலிங்கம் மலைக் கோயிலுக்கு சென்ற சென்னை பக்தர் மாரடைப் பால் பலியானார். சென்னை கலை ஞர் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (65). தனது நண்பர்களுடன் மதுரை மாவட் டம், பேரையூர் தாலுகாவில் உள்ள சதுரகிரி மகாலிங்கம் மலைக் கோயிலுக்கு நேற்று வந்திருந்தார். மலைக்கு சென்று தரிசனம் செய்து விட்டு  கீழே இறங்கி வந்து கொண் டிருந்தார். சின்னப் பசுக்கடை என்ற இடத்தில் வந்தபேது குரு மூர்த்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சில நிமிடங் களில் அவர் இறந்து போனார்.

தகவலறிந்த சாப்டூர் வனச்சரகர் பொன்னுச்சாமி மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் டோலியில் குரு மூர்த்தியின் உடலை கீழே கொண்டு வந்தனர். இதுகுறித்து சாப்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து உடலை பிரே தப் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner