எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, நவ.20  மூன்றாண்டு கால மோடி தலைமையிலான ஆட்சி அனைத்து விவகாரங்களிலும்  படுதோல்வியே கண்டுள்ளது என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் மற்றும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில், பத்திரிகையாளர்களை சந்தித்த லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது, 2014 ஆண் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மோடி, தான் அளித்த  வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட இதுவரை நிறைவேற்ற வில்லை. இவ்விவகாரத்தில் மக்களுக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருந்த நிலையில், பணமதிப்பிழப்பு விவகா ரம், மக்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது.

மூன்றாண்டு கால மோடி தலைமையிலான ஆட்சி, அனைத்து விவகாரங்களி லும் படுதோல்வியையே கண்டுள்ளது. மக்கள், இந்த ஆட்சியின் மேல் கடும் கோபம் கொண்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை, 2018ஆம் ஆண்டிலேயே முன்கூட்டி நடத்த கட்சியினருக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வனவிலங்கான சிங்கத்தைப் பார்த்து பயப்பட்டு வந்த மக்களை, பசுப் பாது காவலர்கள் என்ற போர்வையில் ஆளுங் கட்சியினர் நடத்திவரும் அராஜகச் செயல்களால், வீட்டு விலங்கான பசுவைப் பார்த்தும் மக்கள் பயப்பட துவங்கியுள்ளனர்.

ஆசியாவின் மிகப்பெரிய கால் நடைத் திருவிழா என்றழைக்கப்படும் பீகார் மாநிலத்தின் சோனேபட் கால் நடைத் திருவிழா, பசு பாதுகாவலர்களின் விரும்பத்தகாத நடவடிக்கைகளால், கால்நடைகளே இல்லாமல் வெறிச் சோடியே காணப்படுகிறது.

ஊடகங்கள்மீது பாய்ச்சல் : அமெ ரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில், ஊடகங்கள், ஆளுங்கட்சி உட்பட யார் தவறு செய்தாலும் உடனுக்குடன் அதை வெளியிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவிலோ, ஆளுங்கட்சியினர் எத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தாலும் அவர்களின் ஊழல்கள் ஒரு போதும் வெளிவருவதில்லை. ஊடகங் களுக்கு, மத்திய அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஊடகங்கள், தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு எதிர்க்கட்சிகளை மட்டுமே குறி வைத் துத் தாக்காமல், தவறு செய்த அனை வரையும் வெளிக்காட்ட வேண்டும் என்று லாலு கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner